Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய இணையதளங்களை காப்பாற்றிய ஹேக்கர் சிறுவன்

இந்தியத் தூதரக வலைதளத்தில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிந்து தகவல் அளித்த 17 வயது ஹேக்கர் சிறுவனுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது. 



’Kapustkiy’ என்னும் பெயரில் இயங்கும் இந்த ஹேக்கர் சிறுவன், தனது ட்விட்டரில் , ”இந்திய தூதரகத்தின் பொதுத்தகவல்களை ஹேக்கர்கள் ஊடுருவ வாய்ப்பிருந்ததை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில்  தெரியப்படுத்தினேன். எனது அறிவுறுத்தலின் பேரில் இந்திய அமைச்சகம் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.   மேலும் இந்திய  தகவல் தொழில்நுட்பத் துறை இணை செயலாளர் சஞ்சய் குமார் வர்மா, Kapustkiy-க்கு நன்றி தெரிவித்த கடிதத்தையும் தனது ட்விட்டரில் அச்சிறுவன் இணைத்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ