Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுத்தமான கழிவறைகளுக்கு வழிகாட்ட வருகிறது கூகுள்! #ToiletLocator

சுத்தமான கழிவறை

சென்னை போன்ற நன்கு வளர்ந்த பெருநகரங்களில் கூட, மக்களுக்குப் போதுமான கழிவறை வசதிகள் இல்லை. பல நேரங்களில் நம்மில் பலர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு, சுத்தமான கழிவறை வசதி இல்லாமல் கஷ்டப்பட்டிருப்போம். அப்படியே தேடி ஒரு கழிவறையை கண்டுபிடித்தாலும் அது பயன்படுத்த முடியாத அளவுக்கு, ஒரு மோசமான 'நவீன கட்டண கழிப்பறையாக' இருக்கும். நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் இந்தப் பிரச்னைக்கு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஒரு தீர்வு அளிக்கவிருக்கிறது மத்திய அரசு.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகமும், கூகுள் நிறுவனமும் இணைந்து 'Toilet Locator' என்னும் சேவையை, தலைநகர் டெல்லி பகுதியில் சோதனை முறையில் செய்து வருகிறது. இந்த வசதியை கூகுள் மேப்ஸ் மூலமாகப் பெற முடியும். கூகுள் மேப்ஸ் வசதியை திறந்து அதில், கழிவறை தொடர்பான வார்த்தைகளை கொண்டு தேடினால், நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் கழிவறைகளை காட்டும். இந்த மாதத்தில் சோதனை முறையில் இரண்டு வாரங்கள் டெல்லியில் இந்த வசதி பரிசோதித்து பார்க்கப்படுகிறது. பிறகு இது விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், மால்கள், பேருந்து நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றில் இருக்கும் கழிவறை விவரங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் பொதுமக்களும் கழிவறை விவரங்களை இதில் உடனுக்குடன் இணைக்க முடியும். 

பொதுமக்கள் கழிவறைகளை பயன்படுத்தினால், அதற்கு மதிப்பீடும் வழங்க முடியும். எனவே நல்ல மற்றும் அசுத்தமான கழிவறைகளை மக்கள் இனங்கண்டு பயன்படுத்தவும் இந்த சேவை உதவும். இதன்மூலம் மோசமான கழிவறைகளை கண்டறியவும் முடியும். இந்தியா முழுவதும் இந்த வசதி என்று முதல், கிடைக்கும் என அறிவிக்கப்படவில்லை. 

- ஞா.சுதாகர், அ.அருணசுபா (மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ