Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2000 ரூபாயை ஸ்கேன் செய்தால் மோடி பேசுகிறாரா? உண்மை என்ன?

மோடி

வம்பர் 8-ம் தேதி தொலைக்காட்சி நேரலையில் தோன்றிய நரேந்திர மோடி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்கள் செல்லாது, அதற்கு பதிலாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என அறிவித்தார். அதன்படியே தற்போது 2000 ரூபாய் தாள்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. அந்த 2000 ரூபாய் தாளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மங்கல்யான் செயற்கைகோளின் படமும் இடம்பெற்றது. யூடியூப்களில் மங்கல்யான் படத்தை ஸ்கேன் செய்தால் மோடி பேசுகிறார் என்ற தகவல்  வீடியோவாக வெளியாகி மக்களிடையே பரவி வருகிறது. 

இதற்காக பிரத்யோகமாக 'modi key note' என்ற ஆப் வெளியாகி உள்ளது. இந்த ஆப்பினால் 2000 ரூபாய் நோட்டில் உள்ள மங்கல்யானின் படத்தை ஸ்கேன் செய்தால் மோடி பேசுவது போன்ற வீடியோ ஓட ஆரம்பிக்கிறது. இந்த கீ நோட் ஆப், ரூபாய் நோட்டு மற்றும் கம்ப்யூட்டரின் திரையில் ரூபாயின் படங்களில் உள்ள மங்கல்யானை ஸ்கேன் செய்யும்போது வீடியோ தோன்றும். இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்யும்போது "Disclaimer- For entertaiment purpose only' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டுள்ள 'Barra Skull Studios' நிறுவனம், விளையாட்டு சம்பந்தமான ஆப்களை வடிவமைப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 'மோடி கீ நோட்' ஆப் கள்ள நோட்டு, நல்ல நோட்டு என எதையும் கண்டுபிடிப்பதில்லை. இந்த ஆப்பினை கொண்டு ரூபாய் நோட்டில் இருப்பதுபோல எந்த மங்கல்யான் படத்தின் மீது ஸ்கேன் செய்தாலும் மோடி பேசும் வீடியோ ஓட ஆரம்பிக்கும். இந்த ஆப் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஸ்கேன் செய்தால் இந்த வீடியோ ஓட வேண்டும் என்று ப்ரோகிராமிங் செய்யப்பட்டுள்ள இந்த ஆப் தான் தேவையற்ற வதந்திக்கு காரணமாகியுள்ளது.

பாஸ் இதெல்லாம் பழைய டெக்னிக் வதந்தி ஸ்கூல் குழந்தைங்களே இதெல்லாம் கண்டுபுடிச்சுடும். ஒரு வதந்திய பரப்புரவங்க‌ அது பத்தி முழுமையா ஆராயாமல் கைல கிடைச்ச வீடியோவ ஷேர் செய்யாதீங்க. 


இதற்கான வீடியோ கிழே:

 

 

 

 

- துரை.நாகராஜன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close