Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு புத்தகம் 20000 ரூபாய்... மோடியை புகழ்ந்த பில்கேட்ஸ்! #WeeklyTechTalks

பூமி போதாது என கூறியுள்ள ஸ்டீபன் ஹாக்கிங், மோடியை புகழ்ந்த பில்கேட்ஸ், பெரு கூட்டத்தில் பேசிய மார்க் என இந்த வார டெக் உலகின் முக்கிய நிகழ்வுகள் #WeeklyTechTalks இதோ 


மோடியை புகழ்ந்த பில் கேட்ஸ் #WeeklyTechTalks

 

 

நிடி (NITI - NATIONAL INSTITUTION FOR TRANSFORMING INDIA) என்ற நிறுவனம் சாதனையாளர்களின் விரிவுரைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கடைசியாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவர்கள் புது டெல்லியில் உரையாற்றியுள்ளார்.  தொழில் நுட்பம், துப்புரவு என்று பல தலைப்புகளில் தேவையான விஷயங்களை பற்றி பேசிய அவர் மோடி அரசின் அதிக மதிப்புள்ள பழைய தாள்களை தடை செய்யும் அறிவிப்பை வரவேற்பதாக கூறியுள்ளார். அவர் பேசிய விரிவுரையில் இருந்து  சில முக்கிய அம்சங்கள்:

விவசாயம்:

விவசாயம் இன்று வரை இந்தியாவின் தொழிலாளர்களின் பெரிய சதவீதத்தை பயன்படுத்துகிறது. பசுமை புரட்சியின் மூலம் கடந்த அரை நூற்றாண்டில் இந்தியா விவசாயத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. எனினும், சவால்கள் அதிகம். மக்கள் தொகை பெருக பெருக, ஊட்டச்சத்தின்மை, வானிலை மாற்றம் போன்ற பல இன்னல்களை சமாளிக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி 2022ம் ஆண்டு விவசாயிகளின் இன்றைய வருமானம் இரட்டிப்பாக வேண்டும். அதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவி மிகத்தேவை. 

சுகாதாரம்:

சரியான  சுகாதார வசதியின்மை, இந்தியாவின் மேல் ஒரு பெரிய நோய் சுமையை ஏற்படுத்துகிறது. மனித கழிவுகள் சரியாக சுத்தப்படுத்தபடாமல் நீர் தேக்கங்களில் சேர்வது தூய நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதை தவிர்பதற்காக மோடி அவர்கள் ஸ்வச் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் குறிக்கோள் மிகவும் பெரிது. சரியான பாதையில் இந்த திட்டம் சென்று கொண்டு இருக்கின்றது என்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இது போதாது. பழைய முறைகளிலிருந்து மாறி, தொழில் நுட்பம் சார்ந்த சுகாதார முறைகளை கையாள்வது மிகவும் முக்கியம்.

புதுமையை ஏற்பது:

இந்தியா போன்ற பன்முகம் வாய்ந்த நாடு மற்றவர்கள் புதிதாக ஏதேனும் கண்டு பிடிப்பார்கள் என்று காத்திருக்க முடியாது. இந்தியாவின் புதுமைக்கான தேவையை இந்தியர்களே பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். புதுமையை தழுவி, அதற்கான சரியான தொழில்நுட்ப அடிப்படைகளை வகுக்கும் நாடுகள், உள்நாட்டு சவால்களை  சந்தித்து, மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். இந்தியா சர்வதேச அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றால், உலக தர ஆய்வு மையங்களை உருவாக்குவது மிக மிக அவசியம். 

தொழில்நுட்பம்:

நான் தொழில்நுட்ப வளர்ச்சியின் மேல் மிகுந்த நம்பிக்கை உடையவன். ஆனால் தொழில்நுட்பம் அதை பயன்படுத்துபவர்களின் அளவிற்கே சிறந்தது. தொழில்நுட்பம் நமக்கு ஏற்றார் போல வேலை செய்ய அதனை ஊக்குவிக்கும் அமைப்பு தேவை. நிலையான உலகில் தொழில்நுட்பம் நிலைக்கும். இந்தியாவின் முன் நிற்கும் சவால்கள் வேறு எந்த நாடும் சந்திக்காதவை. சவால்களை சமாளிக்க அரசின் பங்களிப்பு மிக முக்கியம். உலக அளவில் மிக சிறந்த நாடாய் வெளிவரும் அளவிற்கு இளைஞர் படையின் திறமை குவிந்து கிடக்கின்றது. இளைஞர்களை தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்தி அவர்களை சரியாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். சரியான பாதையில் சென்றால் இந்தியா உலக வல்லரசு நாடாகும். 

நிதித்துறை:

பழைய 500 1000 ரூபாய் நோட்டுகளை தள்ளுபடி செய்தது மிக தைரியமான செயல். இது ஒளிவுமறைவு இல்லாத ஒரு பொருளாதாரத்தை உருவாக்கும். டிஜிட்டல் சந்தையை உருவாக்குவது மிக அவசியமான ஒரு திட்டம். சதவீத முறையில் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் பொருளாதாரமாக மாறப்போகிறது. இது ஒளிவுமறைவுகளை மொத்தமாக முடக்கும். முன்னேற்றத்திற்கான அத்தனை அம்சங்களும் இந்தியாவின் வசம் உள்ளன. இந்தியாவின் தேவை சரியான நோக்கமும் கடின உழைப்பும் தான். வல்லரசாக வாழ்த்துக்கள்!!"

ஆப்பிளின் 300 டாலர் புத்தகம், அப்படி என்ன இருக்கின்றது? #WeeklyTechTalks

TechTalks

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஒரு புது போனை வெளியிடும் என்பது நாம் அறிந்ததே. அவ்வகையில் இந்த வருடம் ஐ போன் 7 வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த வருடத்திற்கான கணக்கு முடிந்தது என்று அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால் ஆப்பிளின் இந்த வருடத்திற்கான கடைசி வெளியீடு அது இல்லையாம். மேக் புக், மேக் புக் ப்ரோ என்று கணினிகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், இப்போது ஒரு உண்மையான புக்கை அதாவது புத்தகத்தை வெளியுட்டுள்ளது. 

ஆம், நீங்கள் சரியாக தான் படித்தீர்கள். ஆப்பிள் நிறுவனம் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அது ஒரு பத்திரிக்கையோ செய்தித்தாளோ அல்ல. ஆப்பிள் நிறுவனம் 1998ம் ஆண்டு வெளியிட்ட ஐ மேக் கணினி முதல் 2015ம் ஆண்டு வெளியிட்ட ஆப்பிள் பென்சில் வரை அனைத்து ஆப்பிள் பொருட்களின் களஞ்சியமான இந்த புத்தகத்தின் பெயர், "கலிபோர்னியாவில் ஆப்பிளால் வடிவமைக்கப்பட்டவை" (DESIGNED BY APPLE IN CALIFORNIA). 

உலகத்திற்கு ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு இந்த புத்தகத்தை அர்ப்பணிப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 450 பக்கங்களை கொண்ட அப்புத்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்பு முறை மற்றும் அந்நிறுவனத்தின் பொருட்களின் புகைபடங்கள் இடம் பெற்றுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பிரிவினரும் சேர்ந்து உருவாக்கிய புத்தகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆன்ட்ரூ சுக்கர்மான் என்பவர் எடுத்த புகைபடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தில் எழுத்து எதுவும் கிடையாது.
சிறந்த தொழில் நுட்பம் கொண்டு வெள்ளி வண்ண காகிதங்களால் ஆன இந்த புத்தகம், எட்டு வண்ண பிரிவுகளை கொண்டது. லோ கோஸ்ட் (LOW GHOST) வகை மையால் தயாரிக்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்களாக சேமிக்கப்பட்ட தகவல்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த புத்தகம் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதை பற்றி பேசிய ஆப்பிள் நிறுவன தலைமை வடிவமைப்பு அதிகாரி ஜானி ஐவ் கூறியது,
"மனித குலத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆசை ஸ்டீவ் அவர்களுக்கு இருந்தது.  அந்த ஆசை தான் எங்களின் குறிக்கோளாக இருக்கின்றது. இந்த புத்தகம் எங்களின் பொருட்களின் பட்டியல். இதை பார்த்தால் நாங்கள் ஏன் இந்த நிலையை எட்டி உள்ளோம் என்பது தெரிய வரும். மேலும் மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும்" இந்த புத்தகத்தின் முன்னோக்கத்தில் ஜானி எழுதியுள்ளது,

"இது ஒரு வடிவமைப்பு புத்தகம். வடிவமைப்பவர்கள் பற்றியோ, தொழில் நுட்பம் பற்றியோ இந்த புத்தகத்தில் இருக்காது. நாங்கள் செய்த சில செயல்களின் தொகுப்பால் நாங்கள் யார் என்று உலகிற்கு காட்டவே இந்த புத்தகம். எங்களின் செயல்பாட்டு முறை, எங்களின் மதிப்புத்தன்மை மற்றும் குறிக்கோள்கள் பற்றிய புத்தகம் இது" சிறிய புத்தகம் 199 டாலர்களும், பெரிய வடிவம் 300 டாலர்களும் விலை. இருபது வருடங்களுக்கு பிறகு இதே போல் ஒரு புத்தகத்தை ஆப்பிள் வெளியிடும் என்று கூறியுள்ளது ஆப்பிள் நிறுவனம். 

அடுத்த உலகத்தை தேடுவோம்-ஸ்டீபன் ஹாக்கிங் #WeeklyTechTalks

தன் மனதிற்கு சரியனப்படுவதை யோசிக்காமல் பேசும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த விவாதத்தில் பேசியது மனித சமுதாயதம் தன் வாழ்விற்கான வேறு இடங்களுக்கான  தேடலின் அவசியத்தை உணர்த்தியுள்ளார். 

இன்னும் 1000 ஆண்டுகளுக்குள் மனிதன் தனக்கான வேறு இடத்தை  தேடாவிட்டால் நாம் வாழும் புவியின் முடிவே கூட மனித சமுதாயத்தின் முடிவாகவும் இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்தார்.

சூரிய குடும்பம் தவிர்த்து இருக்கும் மற்ற கிரக குடும்பங்களில் மனித குடியேறத்திற்கான சாத்தியங்களை ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.ஆனால் அடுத்த 100 ஆண்டுகளில் புவியின் சார்பு இல்லாமல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகத்தில் குடியேறுவதற்கான சாத்தியங்கள் கூட மிக குறைவு தான்.இந்த முயற்சியில் நாம் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மனிதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம், விண்கற்களின் தாக்குதல், artificial intelligence,குணப்படுத்த முடியாத நோய்களின் தாக்கம், இவையெல்லாம் மனிதன் தனக்கான வேறு இடத்தை தேடாவிட்டால் மனித சமுதாய அழிவிற்கு காரணமாய் அமையும்.இவற்றை தொழில்நுட்பம் கொண்டு நாம் சமாளித்தாலும், கடைசியில் அதுவே மனித சமுதாயத்தின் அழிவிற்கு காரணமாய் இருக்கும் என்றார். 


உலகத்தை இணைக்கலாம் : மார்க் சக்கர்பெர்க்  #WeeklyTechTalks

 

 

பெருவில் நடைபெற்றுவரும் கனெக்டிவிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சாக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பதிவில் இங்கு 20க்கும் மேற்பட்ட அதிபர்களும், பிரதமர்களும் உள்ளனர். சரியான முதலீட்டை பெற்கொண்டால் நம்மால் உலகத்தையே இணைக்க முடியும், மக்கள் உலகின் எந்த பகுதியிலும் இணைப்பில் இருக்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் பில்லியன் மக்களை இணைக்க வேண்டும். அது தான் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் என்று கூறியுள்ளார்.

-ம. சக்கர ராஜன், செ. ஜெ. பச்சமுத்து,
(மாணவ பத்திரிக்கையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ