Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாம்சங் நோட் 7 வசதிகள் நோட் 5 ஸ்மார்ட்போனில்..!

சாம்சங் நிறுவனம் வெளியிட்ட நோட் 7 ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே வெடித்ததாக பரவலாக புகார்கள் வந்தன. நோட் 7 பிரச்னையால் சாம்சங் போன்களின் விற்பனையும் உலக அளவில் வீழ்ச்சியடைந்தன. இதனால், தனது அடுத்த ஸ்மார்ட் போனை மிகவும் பாதுகாப்பானதாக வெளியிட சாம்சங் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சாம்சங்கின் தலைமை இடமான கொரியாவில் நோட் 7 வசதிகளை நோட் 5ல் வைத்தே வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். கேம் டூல்ஸ், ப்ளூ லைட் ஃபில்டர், வைட் செல்ஃபி மற்றும் பவர் சேவிங் மோட் என்று நோட் 7ல் பிரத்யேகமாக இருந்த வசதிகளை நோட் 5ல் வைத்தே வெளியாகியுள்ளது. இந்தியாவில் சாம்சங் இதை செயல்படுத்துமா என்பது பற்றிய தகவல்கள் இல்லை.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ