Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செகண்ட் ஹேண்டு ஸ்மார்ட் போன்களை விற்பதில் டெல்லி முதலிடம்

Cashify என்ற நிறுவனம் செகண்ட் ஹேண்டு கேட்ஜெட்ஸ்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன் விற்க வந்தவர்களில் 19 சதவீதம் பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது அந்நிறுவனம். இந்த லிஸ்ட்டில் 15 சதவீதத்துடன் பெங்களூரு இரண்டாவது இடத்திலும், 11 சதவீதத்துடன் மும்பை மூன்றாவது இடத்திலும் உள்ளது. குறிப்பாக 9 சதவீதத்துடன் நம்ம சென்னை நான்காவது இடத்தில் உள்ளது. மேலும், இந்த அடுத்த காலாண்டு நிதி முடிவில் ஹைதராபாத், புனே நகரங்கள் செகண்ட் ஹேண்டு போன் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்