Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழையிலிருந்து கேட்ஜெட்ஸை பாதுகாக்க இந்த 4 விஷயம் உங்ககிட்ட இருக்கா?

ழைக்காலத்தில் நமக்கு பெரிதும் கவலை தரக்கூடிய விஷயம் கண்டிப்பாக நம்மிடம் உள்ள கேட்ஜெட்ஸ்களை மழையிலிருந்து பாதுகாப்பது தான். கேமரா, லேப்டாப், மொபைல்களை பாதுகாக்க சில டிப்ஸ்கள் இதோ....

வாட்டர் ப்ரூப் மொபைல் கவர்கள்:

மழை

ஆன்லைன் தளங்களில் வாட்டர் ப்ரூப் மொபைல் கவர்கள் விற்கப்படுகின்றன. தண்ணீர் புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கவர்கள் போனுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 300 ரூபாயிலிருந்து கிடைக்கும் இந்த கவர்கள் பெரிதும் உதவுகின்றன. ப்ளாஸ்டிக் மற்றும் சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கவர்களுக்கு ஏற்ற சீஸனே மழைக்கலாம் தான். 

ப்ளூடூத் ஹெட்செட்:

மொபைல் போன்களை கையிலோ அல்லது பாக்கெட்டிலோ வைத்திருக்கும்போது அது மழையில் நனைந்து வீணாக வாய்ப்புள்ளது. உங்கள் ஸ்மார்ட்போன்களை ப்ளூடூத் மூலம் ப்ளூடூத் ஹெட் செட்டுடன் இணைத்துவிட்டால் அழைப்புகளை மிஸ் செய்யாமலும், அதே சமயம் கேட்ஜெட்டுகளை பாதுக்காப்பாகவும் பயன்படுத்த முடியும். ப்ளூடூத் ஹெட்செட்களை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். ரெயின்கோட்டுகள், பனி ஸ்கார்ஃபுகள் இதற்கு ஹெல்ப் செய்யும். 

வாட்டர் ப்ரூப் பேக்ஸ் 

லேப்டாப்களை பாதுகாக்க வாட்டர் ப்ரூப் பேக்ஸ் கிடைக்கின்றன. மழை நீர் உட்புகாத வண்ணம் அதன் மேல்பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு துளி மழை கூட இந்த பேக்குக்குள் நுழைவது இல்லை. இதற்குள் கேட்ஜெட்டுகளை பாதுக்காப்பது மிகவும் பாதுகாப்பான ஒன்று. ஆன்லைன் மற்றும் ஷோரூம்களில் இந்த பேக் 600 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

கேமரா ஸ்லீவ்ஸ்:

மழை

கேமரா ப்ரியர்கள் மழையை படம் பிடிக்க ஆவலாக இருப்பார்கள். மழையில் அவர்கள் நனைந்தாலும் கேமரா நனையக் கூடாது என விரும்பும் க்ளிக்கர்ஸ்களின் சாய்ஸ் கேமரா ஸ்லீவ்ஸ். இது கேமரா மற்றும் லென்ஸ்களை மழையில் இருந்து பாதுகாக்கும். இது 800 ரூபாய் முதல் கிடைக்கிறது. 

இவையெல்லாம் முன்கூட்டியே மழைக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது சரிதான் என்றாலும், அவசரத்துக்கு நாம் நாடுவது ஒரு பிளாஸ்டிக் பேக் தான். இதில் சிக்கல் என்னவென்றால் அவசரத்துக்கு தேடும் பேக் சரியாக இல்லை என்றால் பேக் இருந்தும் கேட்ஜெட் வீணாவதை தடுக்க முடியாத சூழல் உண்டாகும்.  

- ச.ஸ்ரீராம்

மழை vs கேட்ஜெட்ஸ்


வந்துவிட்டது 'தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோன்'..!

பெங்களூருவைச் சேர்ந்தவர் பிராஷாந்த் ராஜ். இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் மூலம், தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோனை உருவாக்கி இருக்கிறார்.


கேட்ஜெட்களை காக்கும் புதிய வாட்டர் ப்ரூஃப் ஸ்பிரே!

நாளுக்கு நாள் புதுப்புது மேம்பாடுகளுடன் செல்போன்கள் வெளிவந்தாலும் அந்த செல்போன்களை தண்ணீரில் இருந்து பாதுகாக்க வேண்டியே உள்ளது. மழையில் நாம் ஜாலியாக நனையலாம் என்று நினைக்கும்போது, அந்தக் கனவைத் தடுப்பதே, பாக்கெட்டில் இருக்கும் செல்போன்கள்தான்! இந்த பிரச்சனைக்கு தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஸ்பிரேயை கண்டுபிடித்துள்ளனர்.இந்த ஸ்பிரே செல்போன்மீது ஒரு பாதுகாப்பு பூச்சு போல அமையும். இந்த ஸ்பிரேயின் விசேஷ திறன் என்ன என்றால் தண்ணீருக்கு ஒரு தடுப்பாக இந்த ஸ்பிரே அமையும். இந்த திறன்மூலம் செல்போன்களை தண்ணீரில் இருந்து பாதுகாக்கலாம். விமானங்களை பனி தாக்காதபடி பாதுகாக்கலாம். படகின் மேற்பகுதியை துருப்பிடிக்காமல் பாதுகாக்கலாம்.


எடிட்டர் சாய்ஸ்

MUST READ