Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ப்ளூடூத் V5... வயர்லெஸ் சார்ஜிங்... நீளமான திரை... சறுக்குமா சாதிக்குமா சாம்சங் S8? #GalaxyS8

சாம்சங்

டெக் உலகம் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகப்படுத்தியது சாம்சங். கடந்த இரு மாதங்களாகவே இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவம் பற்றி புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் நியூயார்க், லண்டன் என இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது சாம்சங்

தனது வழக்கமாக வடிவமைப்பில் இருந்து சற்று அதிகமாகவே மாறுபட்டு S8 ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல பல வசதிகளையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் S8 மற்றும் S8+  ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

5.8 இன்ச் OLED 2960 x 1440 (570 ppi)2K டிஸ்பிளே

கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி

குவால்காம் ஸ்நாப்டிராகன் 835 64பிட் ஆக்டாகோர் பிராசசர்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி

12 மெகா பிக்ஸல் பின்புற மற்றும் 8 மெகா பிக்ஸல் முன்புற கேமரா.

3000 mAh பேட்டரி திறன் வயர்லெஸ் சார்ஜிங்.

IP68 நீர்புகாத்தன்மையுடைய வடிவமைப்பு.

3.5 mm ஹெட்போன் ஜாக்.

ஆண்ட்ராய்டு 7 நொளகட் இயங்குதளம்.

ஒரே போல வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 6.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் 3500 mAh பேட்டரி மட்டும் S8+ ல் கூடுதல். இதுவரை சாம்சங் ஸ்மார்ட்போன்களின் அடையாளமாக இருந்த அழுத்தும் வகையிலான பிஸிக்கல் ஹோம் பட்டன் இதில் இல்லை. மூன்று பட்டன்களும் ஸ்கீரினிலேயேதான். கைரேகை,கருவிழி, முகம் எனப் பல வழிகளில் S8 ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்யலாம். புளூடூத்தின் அடுத்த பதிப்பான  Bluetooth v5.0 இந்த ஸ்மார்ட்போன் மூலம் அறிமுகமாகிறது.

வழக்கமான மொபைலை விட சற்று நீளமாகத் தெரிகிறது எஸ்8. இதன் வீடியோ ஆஸ்பெக்ட் ரேஷியா காரணமாக இருக்கலாம். 18.2:9 ரேஷிதோ, வீடியோ பார்க்கும் அனுபவத்தை பன்மடங்கு அதிகமாக்கியிருக்கிறது எனலாம். 

சிறந்த கிராபிக் டெக்னாலஜி கொண்ட மொபைல் என்பதால், கேமிங் பிரியர்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ் ஆக அமையும் என்கிறார்கள் மொபைல் எக்ஸ்பெர்ட்ஸ்.

ஆப்பிளின் சிரி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள "பிக்ஸ்பி" உங்களின் வாய்ஸ் கமெண்டுகளுக்கு ஏற்ப வேலை செய்யும். ஏற்கெனவே 3.5mm ஹெட்போன் ஜாக் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 ஐ வெளியிட்ட போது வந்த அதிருப்தி காரணமாக உஷாரான சாம்சங் அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 750 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள  இது ஏப்ரல் 21 முதல் விற்பனைக்கு வருகிறது.

நோட் 7 மாடல் தீப்பிடித்ததில் பிரச்னை,ஆப்பிளோடு காப்புரிமை பிரச்னைகள், தனது நிறுவனத்தின் துணைத்தலைவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது முதல் கடந்த வருடம் சற்று தடுமாறியது சாம்சங். ஆனால் போட்டியாளரான ஆப்பிளும் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்குப் பிறகு உருப்படியாக எதையும் செய்வது மாதிரி தெரியவில்லை என்பதால் புதிய வடிவமைப்பு, புதிய வசதிகள் என களத்தில் இறங்கியிருக்கிறது சாம்சங் வெற்றி பெறுமா S8 ன் விற்பனை பதில் கூறலாம்..

கொஞ்ச காலமாக நெட்டில் சாம்சங்கை கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்ஸ், இந்த மாடலுக்கு நேற்று அமோக ஆதரவு அளித்து, பாசிட்டிவ் ட்வீட்களாக எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

சாம்சங் S8 ன் அறிமுக வீடியோ..

 

 

-மு.ராஜேஷ்
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close