Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணீரைக் குடிக்க வேண்டாம்... கடித்துச் சாப்பிடலாம்..! #Ooho

தண்ணீர்

சமீபத்தில் நீங்கள் சென்ற திருமணம் அல்லது பெரிய நிகழ்ச்சி ஒன்றினை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எத்தனை தண்ணீர் பாட்டில் பயன்படுத்தினீர்கள்? அந்த நிகழ்ச்சியில் எத்தனை பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்? அந்த பாட்டிகள் எல்லாம் இப்போது எங்கே இருக்கும்? பூமிக்கு அவை என்ன மாதிரியான கெடுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்? உலகின் எத்தனை சதவிகித நிலங்களை இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன என யோசித்தால்... யோசிக்கவே பயமாக இருக்கிறது.நாம் இந்த உலகை சுற்றி ஒரு பிளாஸ்டிக் வளையத்தை உருவாக்கி வைத்து இருக்கிறோம். அது நம்மை வேகமாக விழுங்கிக்கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 50 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தயாரிக்க 17 மில்லியன் பேரல் எண்ணெய் தேவைப்படுகிறது. பாட்டில்கள் தயாரிக்கவும்  இயற்கையை அழிக்கிறோம். அதை பயன்படுத்தி தூக்கிப்போடும் போதும் இயற்கையை அழிக்கிறோம். 

அப்படியென்றால், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றுதான் என்ன? இப்படி ஒருவர் யோசித்ததன் விளைவுதான் இந்த ஓஹோ(Ooho) என்கிற  ”Edible watter bottles". Edible என்றால் உண்ணத்தகுந்த என பொருள். 

வாட்டர் பாக்கெட் இருக்கிறது அல்லவா? அந்த பாக்கெட்டை பிளாஸ்டிக்குக்கு பதிலாக சாப்பிடக்கூடிய பொருளினால் தயார் செய்கிறார்கள். பாக்கெட் வடிவத்துக்கு பதிலாக உருண்டையாக இருக்கிறது. ஒரு குட்டி பந்து போல. இதைக் கடித்தால், உள்ளே தண்ணீர் இருக்கும். நீர் அருந்தியதும், மீதியை நாம் சாப்பிட்டு விடலாம். அல்லது, கீழே போட்டாலும் 3 முதல் 4 வாரங்களில் மக்கிவிடும். பூமிக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது இந்த ஓஹோ பந்து.

 

 

100 சதவிகிதம் தாவரங்களாலும், கடற்பாசிகளாலும் ஆன பொருளினால் தான் ஓஹோ தயாரிக்கப்படுகிறது. ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை இது கெடாமல் இருக்கும். ஒரு பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்க ஆகும் செலவை விட இதற்கு குறைவாகவே ஆகும். தேவைப்பட்டால், ஓஹோவில் ஃப்ளெவர், நிறம் சேர்க்கலாம். விரும்பினால் அதை சாப்பிடலாம். அல்லது தூர வீசிவிடலாம். 50 மில்லி முதல் 150 மில்லி அளவு கொண்ட பந்துகள் தற்போது தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன.

இயற்கையாக கிடைக்கும் பழங்கள் அனைத்திலும் மேலே இருக்கும் தோல்களை பிரித்துவிட்டு தான் நாம் பெரும்பாலும் உண்போம். ஓஹோவும் இயற்கைக்கு நண்பனை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மேல்தோலை வைத்திருப்பதாக சொல்கிறார்கள் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப்ஸ் நிறுவனர்கள்.

தண்ணீர்

ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப்ஸ் (Skipping rocks lab) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இதைத் தயாரித்து வருகிறது. லண்டனை மையமாக கொண்ட இந்த நிறுவனத்தின் ஐடியாவை உலகெங்கும் இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் பலரும் ஆதரித்து உதவி செய்து வருகிறார்கள். 
எங்கெல்லாம் அதிக அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்கள் தேவையோ, அங்கே ஓஹோ நிறுவனம் மிஷினோடு போய் விடுகிறார்கள். குறைந்த செலவில், சுத்தமான தண்ணீரை தருவதோடு, இந்தப் பூமியை பிளாஸ்டிக் அரக்கனிடம் இருந்தும் காப்பாற்றுகிறார்கள்.

அறிவியல், வளர்ச்சி என்ற பெயரில் தான் இந்த பூமியை நான் அழித்து வந்திருக்கிறோம். அதே அறிவியல் செய்த பாவத்துக்கு பரிகாரம் போல இப்படி சில விஷயங்களையும் தருவதுதான் சின்ன ஆறுதல்.

-கார்க்கிபவா

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close