Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூகுளில் அதிகம் தேடப்பட்டது... “world war 3". ஏன்? #GoogleTrends

#GoogleTrends world war 3

கடந்த சில நாட்களாக கூகுள் தளத்தில்  அதிகம் தேடப்பட்ட (#GoogleTrends) டாப் வார்த்தைகளில் “WorldWar 3” இடம்பெற்றிருக்கிறது. யார் செய்த வேலை எனத் தேடியதில் அடுத்தடுத்த வார்த்தைகளே அதற்கு பதில் சொல்லின. 

 


”Trump War”, “Nuclear War” போன்ற வார்த்தைகளும் அதிகம் தேடப்பட்டிருக்கின்றன. சிரியா, வடகொரியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்து வரும் அணு ஆயுத சோதனைகளும், சண்டைகளுமே இதற்கு காரணம்.

2004 ஆம் ஆண்டில் இருந்து கூகுள் தனது தளத்தில் தேடப்படும் கீ-வேர்டுகளை டிராக் செய்துவருகிறது. இந்த 13 ஆண்டுகளில் இந்த “World War3”, ”Trump War”,  “Nuclear War” மூன்று வார்த்தைகளும் எவ்வளவு தேடப்பட்டன என்பதை சொல்லும் வரைபடம் இது.

 


 “Syria World War3,” “Going To War” “Russia US War.” போன்ற வார்த்தைகளையும் அதிகமானோர் தேடி வருகிறார்கள். 
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அதன் விளைவுகள் தான் இவை என்கிறார்கள். 

 

 


சிரியாவின் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 6ஆம் தேதி அமெரிக்கா 59 மிஸைல்களை ஏவியது. தொடர்ந்து, ஆஃப்கானிஸ்தான் மீது மிகப்பெரிய வெடிகுண்டை அமெரிக்க வீசியது குறிப்பிடத்தக்கது.

-கார்க்கிபவா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close