Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

25 லட்சம் ஃபாலோயர்கள்... வைரல் வீடியோக்கள்... இந்த ஃபேஸ்புக் பிரபலம் யார் தெரியுமா?

பீஸ்ட் ஃபேஸ்புக்

மார்க்கின் செல்ல நாய்க்குட்டி பீஸ்ட்டின் க்யூட் புகைப்படங்களுக்கு க்ளிக் செய்க 

ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு 1000 லைக் வந்தாலே சிலாகிக்குற ஆட்களுக்கு நடுவுல ஒரு பிரபலம் 25 லட்சம் ஃபாலோயர்கள், பல வைரல் வீடியோக்கள்...இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் முதலாளியே ஹாப்பி பர்த்டே சொல்லுற அளவுக்கு செம கெத்தா வாழ்ந்தா எப்படி இருக்கும்?. அப்படி ஒரு பிரபலமா வாழ்ந்துட்டு இருக்கு பீஸ்ட் எனும் செல்ல நாய்க்குட்டி.

பீஸ்ட்க்குனு தனி ஃபேஸ்புக் பக்கம் இருக்கு. அது வெரிஃபைட் கணக்கு வேற. புலி வகையை சேர்ந்த ஹங்கேரியன் ஷீப்நாயான பீஸ்ட்டின் வயது 6.  மார்க் மற்றும் பிரிசில்லாவின் செல்லக்குழந்தையான பீஸ்ட்...தன்னை க்யூட் என்று தனது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் குறிப்பிட்டுள்ளது. 

பீஸ்ட்டின் பிறந்தநாளை மார்க் வெகு விமரிசையாக கொண்டாடுவார். எல்லா முக்கிய நிகழ்வுகளின் போதும் மார்க்கின் ஸ்டேட்டஸில் குடும்பத்துடன் பீஸ்ட் இடம் பெறுவது டெம்ப்ளேட் விஷயம்.  விதவிதமான ஹேர் ஸ்டைல்..க்யூட் போஸ்கள் என பீஸ்ட்டை ஃபேஸ்புக்கில் லைக், லவ் செய்பவர்கள் 2.5 மில்லியன் பேர்.

தனது முதல் குளியலை பதிவிட்டு கெத்து காட்டிய பீஸ்ட் பின்னர் ஹாலோவீன் தினம், மார்க் மகள் மேக்ஸை பார்த்துக்கொள்ளும் புகைப்படம் என வைரல் ஹிட்களில் இடம் பிடித்தது. இதையெல்லாம் விட பீஸ்ட்டின் அல்டிமேட் ஹிட் என்பது மார்க் ட்ரட்மில் இயந்திரத்தில் பீஸ்ட்டை ட்ரட்மில் செய்ய வைத்தது தான். அதன்பின் கதவுகளோடு மல்லுக்கட்டியது என க்யூட் மொமெண்ட்கள் பீஸ்ட்டின் ஃபேஸ்புக் பக்கத்தில் கெத்து காட்டும். சென்ற மாதம் வெளியிட்ட பீஸ்ட்டின் 360 டிகிரி வீடியோ 3 லட்சம் பார்வையாளர்களை தாண்டி ஹிட் அடித்தது. 

2011ம் ஆண்டு பீஸ்ட்டின் பக்கத்தில், ’எனக்கு சமீபத்தில் ஃபேஸ்புக்கில் இன்ஜினியராக வேலை கிடைத்துள்ளது’ என ஃபேஸ்புக் அலுவலகத்தில் கணினி அருகில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை பீஸ்ட் கணக்கு வெளியிட்டு கலக்கியது. 

2013ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 8 மாதங்கள் எந்த ஸ்டேட்டஸும் இன்றி அமைதியாக இருந்த மார்க் 2014ம் ஆண்டு ஐ யம் பேக் ஸ்டேட்டஸோடு ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டு பலரது டிபிக்களில் இடம்பிடித்தது. 

பீஸ்ட்டின் லுக்கும், ஸ்டைலும் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மார்க் மற்றும் பிரிசில்லாவின் ஸ்டேட்டஸ்களில் அதிகம் இடம் பெறும் பீஸ்ட் இணையத்தில் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறது. பீஸ்ட் கடைசியா டிபி மாத்தினது ஏப்ரல் 2016, ஆனா டெய்லி புதுசா 10 ஆயிரம் பேர் பீஸ்ட்ட ஃபாலோ பண்ணுறாங்க... கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்னு சொல்லுற மாதிரி மார்க் வீட்டு நாய்க்குட்டியும் லைக் வாங்கும்னு சொல்லுவதில் ஆச்சர்யம் இல்லை.

பீஸ்ட்டின் சுவரஸ்யமான தருணங்கள்:

பீஸ்ட்டின் முதல் குளியல்:

ஃபேஸ்புக் அலுவலகத்தில் இன்ஜினியராக வேலை:

இமெயில்களை எழுதும் தருணம்:

மார்க் சக்கர்பெர்க்குடன் ட்ரட்மில்லில் ஓடுவது

இது பீஸ்ட் டான்ஸ்

பிரிசில்லாவுடன் இணைந்து ஆடுகளை மேய்ப்பது

மார்க்கின் செல்ல நாய்க்குட்டி பீஸ்ட்டின் க்யூட் புகைப்படங்களுக்கு க்ளிக் செய்க 

ச.ஸ்ரீராம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close