Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொல்பேச்சை சரியாக கேட்பது யார்? சிரியா,கூகுளா சாம்சங் பிக்ஸ்பியா? #VoiceAssistant

சிரி

அயர்ன்மேன் படத்தில் டோனி ஸ்டார்க் செய்யும் சாகசங்களுக்கு இணையாக அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் "ஜார்விஸ்".அயர்ன்மேனின் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் ஆக செயல்படும் ஜார்விஸ் வாய்ஸ் கமென்டுகளுக்கு ஏற்ப செயல்படும்.

2008 ம் ஆண்டு அயர்ன் மேன் படம் வெளியான போது மனிதர்களின் பேச்சை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் இதைப்போன்ற ஒரு தொழில்நுட்பம் சாத்தியமில்லாத  ஒன்று என்றுதான் பலரும் நினைத்தனர் ஆனால் 2011 ம் ஆண்டில் ஐபோன் 4S ல் சிரி என்ற விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டை ஆப்பிள் அறிமுகப்படுத்திய போது உலகம் ஆப்பிளை வியந்து பார்த்தது.

விர்ச்சுவல் அசிஸ்டென்ட் என்பது நாம் கொடுக்கும் வாய்ஸ் கமென்டுகளுக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களில் இயக்கங்களை மேற்கொள்ளும் ஒரு தொழில்நுட்பம். எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஒருவரை அழைக்க வேண்டும்,மெயில் அனுப்ப வேண்டும்,பிடித்தமான பாட்டை கேட்க வேண்டும்,ஒரு கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால் விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டிடம் கூறினால் போதுமானது. அது உங்களுக்கு வேண்டியதை செய்துவிடும்.இப்போதைக்கு இருக்கும் விர்ச்சுவல் அசிஸ்டெட்களில் ஆப்பிளின் சிரி,கூகுளின் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் சாம்சங்கின் பிக்ஸ்பி ஆகியவை முன்னிலையில் இருக்கின்றன இதில் எதன் செயல்பாடு சிறந்தது என்பதை பார்க்கலாம்.

ஆப்பிள் "சிரி"

siri

இன்றைக்கு பல ஸ்மார்ட்போன்களில் இருக்கும் விர்ச்சுவல் அசிஸ்டென்ட்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது ஆப்பிளின் சிரிதான்.ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ள சிரி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கடந்த ஐந்து வருடங்களில் நிறையவே மேம்பட்டிருக்கிறது.ஹோம் பட்டனை சற்று நேரம்  அழுத்தினாலோ அல்லது ஹாய் சிரி என்று அழைத்தால் உங்களின் பேச்சுக்கு செவி சாய்க்கும் சிரியிடம் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் ,கட்டளையிடலாம், உரையாடலாம், பெரும்பாலும் நீங்கள் கேட்கும்  கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடும்.

சிரி கண் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் உதவியது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை அவர்களால் எளிதில் இயக்க முடிந்தது.  மற்ற போட்டியாளர்களை விடவும் அதிக மொழிகளை புரிந்துகொள்ளும் திறன் இருப்பது இதன் மிகப்பெரிய பலம்.ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை உலகில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் சிரி தான்..

கூகுள் அசிஸ்டென்ட்

கூகுள் அசிஸ்டெண்ட்

இணைய ஜாம்பவான் கூகுள் மிகவும் தாமதமாக கடந்த வருடம் தான்  இந்த தொழில்நுட்பத்தை தனது பிக்சல் ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தியது. தற்போதைக்கு சிரிக்கு ஒரே போட்டியாளர் கூகுள் அசிஸ்டென்ட் தான். ஹோம் பட்டனை சற்று நேரம்  அழுத்தினாலோ அல்லது ஹலோ கூகுள் என்று அழைத்தோ இதை இயக்கலாம்.

கூகுள் நம்மை பற்றி சேகரித்து வைத்திருக்கும் தரவுகள் அதிகம் என்பதால் இதன் செயல்பாடும் சிறப்பானதாகவே இருக்கிறது. சிரியை விட குறைந்த மொழிகளையே புரிந்து கொள்கிறது என்பது ஒரு குறை. மற்ற வாய்ஸ் அஸிஸ்டென்ட்கள் போல இதற்கு ஒரு தனிப்பெயர் வைக்காதது ஏன் என்பதுதான் ஆண்ட்ராய்டு பாய்ஸுக்கே தெரியாத ரகசியம்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ள இது மற்ற மொபைல்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அப்படி எல்லா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இயங்க ஆரம்பித்தால் பயன்பாட்டில் ஆப்பிளின் சிரியை முந்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சாம்சங் "பிக்ஸ்பி"

பிக்ஸ்பி

சாம்சங் சமீபத்தில் அறிமுகப்படுத்திய S8 ஸ்மார்ட்போன்களில் விர்சுவல் அசிஸ்டென்டாக பிக்ஸ்பியை அறிமுகப்படுத்தியது.
மற்றவற்றை போல் இல்லாமல் பிக்ஸ்பியை இயக்க தனியே பட்டனை கொடுத்துள்ளது சாம்சங். சாம்சங் பிக்ஸ்பி சமீபத்தில்தான் வெளியானனது என்பதால் சில காலங்களுக்கு பிறகே அதன் செயல்பாடுகள் பற்றி தெரியும். தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் கொரியன் மொழிகளில் மட்டுமே பிக்ஸ்பி இயங்கும். 

இன்னும் தமிழில் எந்த வாய்ஸ் அஸிஸ்டென்ட்டும் வரவில்லை.

-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close