Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீறிப்பாய்ந்த ராக்கெட்டை 9 நிமிடத்தில் தரையிறக்கி மாஸ் காட்டிய ஸ்பேஸ் எக்ஸ்!

ஸ்பேஸ் எக்ஸ்

ஒரு விமானத்தை தரையிறக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. மணிக்கு பல மைல் வேகத்தில் சீறிப்பாயும் ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதனை வெற்றிகரமாக நடத்தி காட்டியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இதுவரை 14 முறை விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. 14வது முறை விண்ணில் ஏவப்படுவதற்கான வேலைகள் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் நிறுவப்பட்டிருந்தது.

ஃபால்கான் 9 ராக்கெட்டானது திட்டமிட்டமிட்டபடி ஞாயிறன்று விண்ணில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக இந்த நிகழ்வை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தது ஸ்பேஸ் எக்ஸ். சரியாக திட்டமிட்ட நேரத்தில் துவங்கிய கவுண்டவுனில் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. குறிபிட்ட தொலைவு பயணித்த பின் முதல் பாகம் பிரிந்து பூமியை நோக்கி விரைந்தது. சரியாக 9 நிமிடம் 19 நொடியில் முதல் பாகம் மட்டும் தளத்தை அடைந்து தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது ஸ்பேஸ் எக்ஸ்.

இன்று ஏவப்பட்ட ஃபால்கான் 9 ராக்கெட்டில் NROL-76 செயற்கைகோளை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதும், முதல் கட்ட பகுதியை தரையிறக்குவதும் நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி ஃபேஸ்புக் லைவ் மூலம் நேரலை செய்தது. சரியாக கவுண்டவுன் முடிந்தவுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட், தனது முதல் கட்டத்தை சரியாக 2 நிமிடம் 20 நொடியில் அடைந்தது. பின்னர், அது மறுபடியும் பூமியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. 

சரியாக 7:09 நிமிடத்தில் முதற்கட்ட நுழைவையும், 08:46 நிமிடத்தில் லேண்டிங் பர்னிங்கையும் துவங்கிய ஸ்பேஸ்ப் எக்ஸ் ராக்கெட் 9:19 ல் வெற்றிகரமாக தரையில் உள்ள லாண்ச் பேடில் இறக்கப்பட்டது. அமெரிக்காவுக்கான ஒரு ரகசிய ஸ்பை செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இந்த ராக்கெட், செயற்கை கோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஸ்பேஸ் எக்ஸ் இணைத்து செயல்படுத்தியுள்ள முதல் திட்டம் இது. முதல் பாகத்தை மட்டும் பத்திரமாக தரையிறக்கி தனது நோக்கத்தை நிறைவு செய்தது ஸ்பேஸ் எக்ஸ்.

இந்த முறை வேறு எந்த ஃபால்கான் பாய்ச்சலிலும் இல்லாத ஒரு விஷயமாக தனது வெப் காஸ்டில் புதுமையான உத்தியை கையாண்டுள்ளது. இதில் பல்வேறு கோணங்களில் கேமராக்களை பயன்படுத்தி இந்த நிகழ்வை சரியாக நேரலையில் காட்டியது. எந்த ஒரு ராக்கெட் செலுத்துதலிலும் இல்லாத புதிய உத்தியை ஸ்பேஸ் எக்ஸ் கையாண்டுள்ளது. 

ஸ்பேஸ் எக்ஸின் லைவ் வீடியோ:

 

 

இதன் நிறுவனர் எலான் மஸ்க் 1959ம் ஆண்டில் வெளிவந்த சயின்ஸ் பிக்சன் படமான தி ஸ்கை கால்ஸ் படத்தில் வரும் ராக்கெட் தரையிறங்கும் காட்சியை நேரடியாக நிகழ்த்தி காட்டியுள்ளனர் என்று ஒரு ட்விட்டர் பக்கம் ட்விட் செய்ய அதனை பலர் ரீ-ட்விட் செய்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு வெற்றிகரமான முயற்சியாகவும், எதிர்காலத்தில் செலவை குறைக்கும் உத்தியாகவும் இருக்கும் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிருபித்துள்ளது.

எலான் மஸ்க்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஃபால்கான் பற்றிய ட்விட்கள்:

 


Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close