Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்ட்ராய்டின் அடுத்த அப்டேட்... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! #AndroidO

மார்ச் மாதம், ஆண்ட்ராய்டு ஓ-வின் (AndroidO) டெவலப்பர் ப்ரிவ்யூவை வெளியிட்டிருந்த கூகுள், சமீபத்தில் நடந்த I/O டெவலப்பர் நிகழ்வில் பீட்டா வெர்ஷனை வெளியிட்டது. நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் ப்ளேயர், பிக்ஸல் C, பிக்ஸல், பிக்ஸல் XL ஆகிய டிவைஸ்களில் மட்டுமே ஆண்ட்ராய்டு ஓ-வின் பீட்டா வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு நௌகட்டிலிருந்து பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லையென்றாலும், சில மாற்றங்கள் மட்டும் கவனிக்க வைக்கின்றன. அப்படி ஆண்ட்ராய்டு ஓ-வில் குறிப்பிடத்தக்க 10 அம்சங்கள் இவைதாம்.

ஆண்ட்ராய்டு ஓ AndroidO

1. ஸ்மார்ட் ஷேரிங்:

ஆர்ட்டிபிஃஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மொபைல் கேமரா ஆகிய இரண்டும் செயல்படக் கூடியன. இந்த ஸ்மார்ட் ஷேரிங். உதாரணமாக உங்கள் மொபைல் கேமராவில் ஹோட்டல் பில்-ஐ போட்டோ எடுத்தால் உடனே ஆண்ட்ராய்டு ஓ, இதனை ஃபைனான்ஸ் தொடர்பான ஆப்களில் ஷேர் செய்யட்டுமா எனக் கேட்கும். செல்ஃபி எடுத்தால், சமூக வலைதளங்களைக் காட்டும். இணையதள முகவரி, வீடியோ, டெக்ஸ்ட் போன்றவற்றிற்கும் இது பொருந்தும். ஆட்டோமேட்டிக்காக மட்டுமே இப்படி அறிவுரைகளை வழங்காமல், பயனாளர்களின் பயன்பாட்டைப் பொறுத்து இதனை மேம்படுத்திக் கொண்டே இருக்கும்.

2. ஐகான்களின் வடிவம்:

அடாப்டிவ் ஐகான்

ஐகான்களின் வடிவத்தை மாற்றுவதற்காக அடாப்டிவ் ஐகான் லாஞ்சர்களை உருவாக்கியுள்ளது கூகுள். இதன் மூலம் ஆப்ஸ்களின் ஐகான்களை வட்டம், சதுரம் என மாற்றிக் காட்டும் ஆண்ட்ராய்டு ஓ.

3. இனி எமோஜிகள் உடையாது!

எமோஜி லைப்ரரி

புதிய எமோஜிக்களை, சில ஆப்கள் சப்போர்ட் செய்யவில்லை எனில், அந்த இடங்களில் கட்டம் கட்டமாக காட்டப்படும். ஆனால் ஆண்ட்ராய்டு ஓ-வில் அந்தப் பிரச்னை இல்லை. புதிதாக வரும் எல்லா எமோஜிக்களையும் எமோஜி சப்போர்ட் லைப்ரரி அப்டேட் செய்துவிடும். எனவே புதிய எமோஜிக்களை ஏதேனும் ஆப் கட்டமாகக் காட்டினால், அதனை இந்த லைப்ரரி மாற்றிவிடும். எனவே எந்த எமோஜியும் உங்கள் மொபைலில் மிஸ் ஆகாது.

4. AI காப்பி பேஸ்ட்:

மெஷின்லேர்னிங் மூலமாக காப்பி பேஸ்ட் செய்யும் வசதியை மெருகேற்றியுள்ளது கூகுள். உதாரணமாக ஒரு இடத்தில் இருக்கும் முகவரியை நீங்கள் காப்பி செய்தால், உடனே டூல்பாரில் கூகுள் மேப்ஸ் காட்டப்படும். நீங்கள் அந்த முகவரியைத் தேட வேண்டும் என்றால் அங்கே பேஸ்ட் செய்து கொள்ளலாம். 

 AI காப்பி பேஸ்ட்

5. நோட்டிஃபிகேஷன் மாற்றங்கள்:

உங்கள் மொபைல் ஆப்ஸ்களுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களை, அலாரம் போல Snooze செய்ய முடியும். இதனால் முக்கியமான நோட்டிஃபிகேஷன்களைத் தவற விடாமல் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், பல ஆப்ஸ்களிலிருந்துவரும் நோட்டிஃபிகேஷன்களைப் பிரித்துப் பார்ப்பதற்காக, ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வண்ணங்களைக் கொடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. எனவே ஒவ்வொர் ஆப்பிற்கும் ஒவ்வொரு வண்ணம் எனப் பிரித்து பிரித்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

6. நோட்டிஃபிகேஷன் சானல்கள்:

நோட்டிஃபிகேஷன் சானல்கள்

நோட்டிஃபிகேஷன்களின் தொல்லையிலிருந்து விடுபடவும், அவற்றைப் பயனுள்ளதாக மாற்றுவதற்காகவும்தான் இந்த நோட்டிஃபிகேஷன் சானல்கள். இதன்மூலம் ஒரு ஆப்பில் இருந்து குறிப்பிட்ட நோட்டிஃபிகேஷன்கள் மட்டுமே வருமாறு செய்ய முடியும். உதாரணமாக வாட்ஸ்அப்பில் நிறைய மெசேஜ்கள் உங்களுக்கு வரும். அவற்றை நீங்கள் விரும்பாவிட்டால் நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் அதில் உங்களின் நண்பரின் உரையாடல் தொடர்பான நோட்டிஃபிகேஷன் மட்டும் வேண்டும் என்றால், அதற்கென நோட்டிஃபிகேஷன் சானலை உருவாக்க முடியும். இது அனைத்து ஆப்களுக்கும் பொருந்தும்.

நோட்டிஃபிகேஷன் பேட்ஜ்

இதுதவிர நோட்டிஃபிகேஷன் பேட்ஜ் என்ற வசதியும் உண்டு. இதற்கு நோட்டிஃபிகேஷன் டாட் என்றொரு பெயரும் உண்டு. அதாவது ஓர் ஆப்பில் இருந்து வரும் நோட்டிஃபிகேஷன்களை நீங்கள் பார்க்காமலே வைத்திருக்கிறீர்கள் என்றால், அந்த ஆப் ஐகானின் ஓரத்தில் சிறிய புள்ளி ஒன்று தோன்றும். பிறகு அந்த ஐகானை க்ளிக் செய்வதன் மூலம் நோட்டிஃபிகேஷன்களைக் கையாள முடியும். போன் இன்பாக்ஸிற்கு வரும் மெசேஜ்களைப் படிக்காவிட்டால் அன்ரீட் (UnRead) எனக் காட்டுமே? அதைப்போலதான் இதுவும். இந்த வசதி வேண்டாம் என்றால் செட்டிங்க்ஸ் சென்று மாற்றியும் கொள்ளலாம்.

7. பிக்சர் இன் பிக்சர் மோட்:

இந்த மோட் ஏற்கெனவே சில ஆப்ஸ்களில் இருந்தாலும், இதனை இன்னும் விரிவுபடுத்துவதற்காக ஆண்ட்ராய்டு ஓ-வில் இந்த ஆப்ஷனைக் கொண்டுவந்துள்ளது கூகுள். இதன்மூலமாக எந்த ஆப் பயன்படுத்தும்போதும், உங்களால் வீடியோக்களை ப்ளே செய்து பார்க்கமுடியும். இந்த வசதி ஆண்ட்ராய்டு ஓ டெவலப்பர் ப்ரிவ்யூவிலேயே இருந்தது.

8. ஆட்டோஃபில் API:

பாஸ்வேர்டு, முகவரி போன்ற தகவல்களை டைப் செய்ய வேண்டியிருந்தால் நாம் ஒவ்வொரு முறையும் முழுதாக டைப் செய்ய வேண்டும். ஆனால் இவற்றை எளிதாக்குகிறது ஆட்டோஃபில் API. எந்த ஆப்பில் டைப் செய்ய வேண்டும், எந்த விவரங்களை டைப் செய்ய வேண்டும் போன்ற விவரங்களை இந்த வசதி பார்த்துக் கொள்ளும்.

9. வைஃபை Aware:

நெய்பர் அவார்னஸ் நெட்வொர்க் (NAN) மூலமாக, உங்களின் மொபைல் வைஃபை உதவியுடன் உங்களுக்கு அருகே இருக்கும் டிவைஸ்களுடன் எளிதாக இணைய முடியும். இதன்மூலமாக பல டிவைஸ்களை வைஃபை மூலமாகவே இணைத்து ஒரு நெட்வொர்க் உருவாக்க முடியும். இதற்கான சப்போர்ட் ஆண்ட்ராய்டு ஓ-வில் இருக்கும். ஆனால் இதற்கு மென்பொருள் அளவில் மட்டுமில்லாமல், ஹார்ட்வேர் உதவியும் தேவைப்படும் என்கிறது கூகுள். 

10. ஆண்ட்ராய்டு டிவி லாஞ்சர்:

ஆண்ட்ராய்டு டிவி லாஞ்சர்

ஆண்ட்ராய்டு டிவிக்கான புதிய லாஞ்சரை அறிமுகம் செய்கிறது கூகுள். இதன் யூசர் இன்டர்பேஸ் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் எளிதாக சானல்களைக் காணமுடியும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close