Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருடிய மொபைலில் செல்ஃபி... கூகுள் டிரைவ் மூலம் திருடர்களைப் பார்த்த ஓனர்!

"ஹைய்யா... இன்க்ரீமென்ட் போட்டாங்க. குட் ரேட்டிங்" என ஸ்டேட்டஸ் போட்டால் 800 லைக்ஸ் வரும். கூடவே ஹவுஸ் ஓனரும் லைக் போடுவார். ஒரே ஒரு லைக்கில் அந்த ஒட்டு மொத்த சந்தோஷமும் காணாமல் போய்விடும்.  இந்த டெக்னாலஜி கலாட்டா நிஜமாக நடந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் நொய்டாவில் இதை விட காமெடியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

செல்ஃபி

மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று , சிக்னலில் நின்று பேசிக்கொண்டிருந்த ஒருவரின் மொபைலைத் திருடிக்கொண்டு சென்று விட்டனர். புதிய ஓப்போ செல்ஃபி எக்ஸ்பெர்ட் மொபைல் அது. திருடர்களை அந்த ஓப்போ மொபைல் ஓனரும் விடாமல் துரத்திச் சென்றிருக்கிறார். திருட வருபவர்கள் ஓடத் தெம்பில்லாமலா வருவார்கள்? தப்பித்துவிட்டனர் அந்த நொய்டா உசேன் போல்ட்கள். ஆனால், ஓடத் தெரிந்த அளவுக்கு டெக்னாலஜி அறிவு இல்லாதவர்கள் போலும். திருடிய மொபைலில் தினமும் நூறு செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் ஒரிஜினல் ஓனரின் கூகுள் டிரைவில் சேவ் ஆகிவிட்டன. மொபைலைத் தொலைத்ததும் இல்லாமல், அவர்கள் திருமுகங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து கோவத்தின் எல்லைக்கே போய்விட்டார் அந்த ஓப்போ போனின் ஓனர். லொகேஷனும் ஆன் செய்யப்பட்டு இருந்ததால்,அவர்கள் இருக்கும் இடம்கூட தெளிவாகத் தெரியுமாம். ஆனால், போலீஸில் இவை அனைத்தையும் சொல்லியும் கூட பயனில்லை. ஓப்பனிங் இறங்கிய ரஹானே போல அனைத்து க்ளூ பந்துகளையும் டொக்கு வைத்திருக்கிறார்கள் நொய்டா போலீஸ். இப்போது சமூக வலைதளங்களின் நியாயம் கேட்டு வருகிறார் போனின் ஓனர். அது என்ன சொல்வதெல்லாம் உண்மையா என நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர். 

இப்போது வரும் பெரும்பாலான மொபைல்கள் பெரிதாக இருப்பதால், பேசிக்கொண்டே இருக்கும்போது பிடிங்கிச் செல்ல வசதியாக இருக்கிறது. user friendly போல இவை எல்லாம் theft friendly மொபைல்கள் போல.

திருடிய உடன் திருடர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. அவர்களுக்குத் திருட வாய்ப்பே தராமல் மொபைலை நாம்தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதே. கூகுள் டிரைவ் மூலம் திருடனின் செல்ஃபி கிடைத்தது நல்ல விஷயம்தான். ஆனால் அதே டிரைவ் மூலம் திருடனும் நமது படங்களைப் பார்க்கலாம். டவுன்லோடு செய்யலாம். அது மொபைல் திருடுபோவதை விட ஆபத்தானது. மேலும், நமது மின்னஞ்சல், பேங்க அக்கவுன்ட் என அனைத்தையும் அவர்களால் ஆக்ஸெஸ் செய்ய முடியும்.

உங்கள் மொபைலில் இருக்கும் access/ permission விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். 

மொபைலில் உள்ள தகவல்களை அழிக்க :
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் தொலைந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். 'மொபைல் போனாக்கூட இன்னொன்னு வாங்கிக்கலாம் பாஸ். ஆனா அதுல இருக்குற டேட்டாவ வேற யாரும் தப்பா பயன்படுத்திடக் கூடாது' என நினைப்பவர்களுக்கு இந்த ட்ரிக் உதவும். தொலைந்துபோன மொபைலில் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்து 'Erase' என்ற ஆப்சனை கிளிக் செய்தால் மொபைலில் இருக்கும் அத்தனைத் தகவல்களும் டெலீட் செய்யப்பட்டுவிடும்.

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் தொலைந்தால், என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close