Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நோக்கியா 6 முன்பதிவைத் தொடங்கியது அமேசான்!

நோக்கியா

அடைந்தால் நோக்கியா... இல்லையேல் போய்க்கியா” எனக் காத்திருக்கும் ஸ்மார்ட்போன் காதலரா நீங்கள்? ஒரு வழியாக அதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். அமேசான் தளத்தில் இப்போதே ரிஜிஸ்ட்ரேஷன் செய்துகொள்ளலாம். ஆனால், ஆகஸ்ட் 23-ம் தேதிக்குப் பிறகுதான் மொபைல் கைக்கு கிடைக்கும். 'நோக்கியா 6 'ஆன்லைனில் மட்டுமே வெளியாகவிருக்கும் மொபைல். இதற்கு முந்தைய மாடல்களான நோக்கியா 5 மற்றும் 3 ஆகியவை ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை ஆகின.

'நோக்கியா 6'-ன் விலை 14,999. சிலபல கேஷ்பேக் ஆஃபர்களையும் அமேசான் அறிவித்திருக்கிறது.


வசதிகள்:
5.5 இன்ச்  IPS FHD (1080 x 1920)  டிஸ்ப்ளே.
கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.
64 - பிட் ஸ்நாப்டிராகன் 430 MSM8937 ஆக்டாகோர் பிராஸசர்.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி.
மெமரி கார்டு மூலமாக மெமரியை 128 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளும் வசதி.
16 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்புற கேமராவைக்கொண்டுள்ளது.
டூயல் சிம் மற்றும் 4G LTE வசதி இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்.
3,000 mAh திறன்கொண்ட பேட்டரி.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close