Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பைக்கின் விலை ரூ. 4,15,000. ஆனால் 2030 வரை வேற எந்த செலவும் கிடையாது!

ஒரு அருமையான கண்டுபிடிப்பை ஒரு கம்பெனி, இந்த உலகத்துக்கு நடத்திக் காட்டி இருக்கிறது. நாளை எரிபொருள் விலை எப்படி இருக்கும், அதற்கு எவ்வளவு நாம் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்..., இருசக்கர வாகன பராமரிப்பு, பெட்ரோல், இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலவுகள், திடீரென ஏற்படும் விபத்து காரணமாக வாகனத்தை சீரமைக்க தேவைப்படும் பணம் என எதுவுமே இந்த வாகனத்திற்குத் தேவை இல்லை என்று அந்த நிறுவனம் மிக பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி இருக்கிறது. இந்த வாகனத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாங்கியவர்கள் கூட 'அட ஆமாங்க இவங்களே சர்வீஸ், பெட்ரோல், எல்லாத்துக்கு காச கொடுத்திடுறாங்க. அவ்வளவு ஏன், இன்ஷூரன்ஸ் ரெனீவ் பண்றத்துக்கு கூட இவங்களே வருஷம் பொறந்த காசு கொடுத்துடறாங்கன்னா பாத்துக்குங்களேன்' என்கிறார்கள்.

நாம செய்ய வேண்டியது எல்லாம், ரூ 4,15,000 ரூபாயை, கட்டிட்டு வண்டிய வாங்கிக்க வேண்டியது தான் பாஸ். எல்லா வண்டி மாதிரி தான் இந்த வண்டியும் இருக்கு. இதுக்கும் பெட்ரோல் போடுறோம், டயர் தேயுது, சர்வீஸ் பன்றோம், திடீருன்னு பெரிய ஆக்ஸிடென்ட் எல்லாம் ஆகுது, ஆனா எல்லாத்துக்கு இந்த கம்பெனி காச தந்துடறாங்க என ஒரு நண்பர் சொல்ல, உடனே, அந்த நிறுவனத்தில் ஆட்களை பிடித்து விசாரிக்கத் தொடங்கினோம். இதெல்லாம் எப்படி சாத்தியமாகுது, எப்படி காச திருப்ப கொடுக்குறீங்கன்னு என விசாரித்த போது "சார் மொதல்ல வண்டிக்கு என்ன செலவு இருக்குன்னு பாத்தோம். அதுல பெட்ரோல், வண்டி மெயின்டினன்ஸ், இன்ஷூரன்ஸ், எமெர்ஜென்ஸி என 4 டைப் செலவுகள் இருந்துச்சு. இதுல பெட்ரோல் மட்டும் ஒரு மாசத்துக்கு 15 லிட்டர் போட்டுக்கலாம். அப்படித் தான் எங்க கணக்கீடுகள் இருக்கு.

அத அப்படியே வருஷத்துக்கு கணக்கு பண்ணோம், அதோடு விலை வாசிய கணக்குல எடுத்துக்குறத்துக்கு 6 சதவிகித பணவீக்கத்தை கணக்கு பண்ணோம். எப்படி பாத்தாலும் இந்த விலைவாசிய அவ்வளவு ஈஸியா பீட் பண்ணமுடியாதுங்குறது எங்களோட கணிப்பு.

 

அடுத்து 2030-வரை கஸ்டமருக்கு தேவையான காச கொடுக்குறத்துக்கு கஸ்டமர் பே பண்ற 4,15,000 பணத்த, இரண்டாக பிரித்து ரூ. 4 லட்சத்தை தனியாக 8 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய முதலீட்டிலும், ரூ 15 ஆயிரத்தையும் அதே மாதிரி ஆண்டுக்கு 8 சதவிகிதம்  வருமானம் தரக் கூடிய திட்டங்களில் முதலீடு செஞ்சிருவோம். அவ்வளவு தான் சார். கஸ்டமருக்கு மொத வருஷத்துக்கு 4 - 6 சர்வீஸ் ஃப்ரீயா பண்ணிடுவோம். அதே மாதிரி மொத வருஷம் மட்டும் அவங்களயே பெட்ரோல் போட்டுக்க சொல்லிடுவோம். அடுத்த வருஷத்துல இருந்து கரெக்டா வருஷம் பொறந்தா 15 லிட்டர் பெட்ரோல் (மாதம்), 4 சர்வீசுக்கான காசு, இன்ஷூரன்ஸுக்கான காசு எல்லாம் கொடுத்துடுவோம். எங்களுக்கு 4 லட்ச ரூபாயில இருந்து வர்ற வட்டி காசத் தான் கஸ்டமருக்கு கொடுக்குறோம். எங்க அக்கவுண்ட்ஸ் ஷீட்ட  பாருங்களேன். இது தான் இன்வெஸ்ட்மென்ட் எஸ்டிமேட்.


 

சரி, பெரிய ஆக்ஸிடென்ட் ஆகி வண்டிய பெருசா ரிப்பேர் பண்ணணும்னா என்ன பண்ணுவீங்க. "அது தான் மீதி 15,000 ரூபாய் இருக்கே. அதயும் 8-9 சதவிகிதம் ஆண்டுக்கு வருமானம் தரக்கூடிய திட்டங்கள்ள முதலீடு பண்ணிடுவோம். பெரிய ஆக்ஸிடென்ட் ஆகலன்னா வருஷா வருஷம் அந்த 15,000 வளர்ந்துகிட்டே இருக்கும். ஒருவேளை எங்க 4,00,000 ரூபாயில இருந்து வர்ற வட்டிய தாண்டி எக்ஸ்ட்ரா  சில்லறை செலவு வந்தா (கணக்கு படி 99 சதவிகிதம் வராது). இந்த 15000 ரூபாய் முதலீட்டுல இருந்து காச கொடுப்போம்.

 

எப்படி பாத்தாலும் எங்க கையில நல்லா காசு புழங்கிக்கிட்டே இருக்கும். கஸ்டமர்களுக்கும், அவங்களோட வண்டி செலவுக்கான காச அப்படியே திருப்பி தந்துட்றதுனால, எங்களுக்கும் மார்க்கேட்ல நல்ல பேர். அது சரி கியாரண்டின்னு சொல்லி இருந்தீங்களே... அட ஆமாங்க, கணக்கு எத்தனை முறை போட்டாலும் இதுதான் விடைன்னு நான் கேரண்டி கொடுக்குறேன். ஆனா கட்டுப்பாட்டோட சரியா முதலீடு பண்றத்துக்கு நீங்க தான் கியாரண்டி கையெழுத்து போட்டு நிதி ஒழுக்கத்தோட இருக்கணும்னு சொன்னாரு... என்ன... ஏதோ மாதிரி இருக்கேன்னு தூக்கத்துல இருந்து எழுந்திரிச்சி பாத்ததா கனவு.

கனவா இருந்தாலும் லாஜிக்கோடுதான் வந்தது. கூட்டி கழிச்சு பாத்திருக்கேன். கணக்கு, எனக்கு சரியா வருது. உங்களுக்கு சரியா வருதுன்னா... டிரை பண்ணி பாருங்களேன். இந்த முதலீட்டு திட்டத்தை இன்னொரு நிறுவனம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தனி மனிதனே செய்யலாம். முயற்சித்து பாருங்கள். நான் பல ஆண்டுகளாக செய்து வரும் விஷயம் என்பதால் ரிசல்ட் கியாரண்டி. பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வையுங்கள்.

-மு.சா.கெளதமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close