Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடும்பத்தினர் அனைவரையும் அசத்த... மட்டன் தோ பியாஸ்! #WeekendRecipes

                                                           மட்டன்


வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். மட்டன் தோ பியாஸ் செய்ய நீங்க ரெடியா! பேரே வித்தியாசமாக இருக்கிறதா.. சுவையும் அப்படித்தான். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் தோ பியாஸ் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் பேராசிரியர் ஜெயலஷ்மி.

செய்ய தேவையானவை:
மட்டன் - அரை கிலோ  
பெரிய வெங்காயம் - 125 கிராம்(நீளவாக்கில் நறுக்கியது)  
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 கிராம்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

விழுதாக அரைக்க: 
காய்ந்த மிளகாய் - 10 கிராம்  
முழுமல்லி(தனியா) - 15 கிராம்    
இஞ்சி - 15 கிராம் 
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 125 கிராம்
தண்ணீர் - சிறிதளவு
                        
செய்முறை:
மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம்செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அதே கடாயில் விழுதாக அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் மசாலாவிலிருந்து பிரிந்து வரும்போது மட்டனைச் சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் வறுத்து வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் உப்பு, தேவையான அளவு வெந்நீர் சேர்த்துக் கலக்கிவிட்டு மூடிவைத்து வேகவிடவும். மட்டன் நன்கு வெந்து கிரேவி கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

மட்டன் தோ பியாஸ்-வுடன் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துக்கு சுவையான காம்பினேஷனாக இருக்கும்.
                                                                                                                                                                                    - கு.ஆனந்தராஜ்
 படம்: த.ஶ்ரீநிவாசன்

எடிட்டர் சாய்ஸ்