Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி - வணிகர்கள் செய்ய வேண்டியது இதுதான்!

அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகள் மீது ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி உள்பட பலதரப்பட்ட வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் வர்த்தகம் கையாளுவதில், வரி வசூலிப்பதில் இருக்கும் சிக்கல்களைக் களைவதற்கு ஜி.எஸ்.டி மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி-ல் உள்ள குழப்பங்களைப் போக்கும் வகையிலும், வணிகர்கள் செய்ய வேண்டியது குறித்தும் தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம். 

வணிகர்கள்

பதிவுச்சான்று (Registration)

https://www.gst.gov.in இணையதளம் மூலம் ஜி.எஸ்.டி பதிவுச்சான்று வழங்கப்படும். 

முழுமையாக உள்ள பதிவு விண்ணப்பத்துக்கு 3 வேலை நாள்களுக்குள் 15 இலக்கம் கொண்ட ஜி.எஸ்.டி எண் வழங்கப்படும்.

பதிவுச்சான்று பெறுவதற்கு பான் எண் அவசியம்.

பதிவுக் கட்டணம் இல்லை.

ஆண்டு விற்பனைத் தொகை ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி-ன் கீழ் பதிவு அவசியமில்லை.

வரி விலக்கு பொருள்கள் மட்டும் வழங்கும் (Supply) வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி பதிவு அவசியமில்லை.

வாட்-ல் இருந்து ஜி.எஸ்.டி-க்கு பதிவு மாற்றம் செய்த வணிகர்கள் தற்காலிக பதிவு எண் மூலம் 3 மாதம் வரை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். 

01.07.2017-லிருந்து 3 மாதங்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தற்காலிக ஜி.எஸ்.டி.ஐ.என் (GSTIN)-ஐ நிரந்தர GSTIN ஆக மாற்றிக் கொள்ளலாம். 

Migrate செய்யப்பட்ட நபர் ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் பதிவு பெறத் தேவையில்லை என்றால் முறையாக விண்ணப்பித்து பதிவுச் சான்றினை ரத்து செய்து கொள்ளலாம். 

சி.ஜி.எஸ்.டி., எஸ்.ஜி.எஸ்.டி., மற்றும் ஐ.ஜி.எஸ்.டி சட்டங்களுக்கு ஒரே விண்ணப்பம். 

மாநில வாரியாக பதிவுச் சான்று பெற வேண்டும். 

20 லட்சத்துக்கு கீழ் ஆண்டு மொத்த விற்பனைத் தொகை உள்ளவர்கள் தானாக முன்வந்து பதிவு பெற்றுக் கொள்ளலாம். (Voluntary Registration)

நமூனாக்கள் - (Returns)

பெட்ரோலியம் மற்றும் மதுபான பொருள்கள் விற்பனை சம்பந்தமான நமூனா தாக்கல், வரி செலுத்துவது மற்றும் முந்தைய சட்டங்களில் உள்ள வரி நிலுவைகளை www.ctd.tn.gov.in வலைத்தளத்தில் மேற்கொள்ள வேண்டும். 

ஜூன் மாத வாட் நமூனாக்கள் மற்றும் வரித் தாக்கலை www.ctd.tn.gov.in வலைத்தளத்தில் மேற்கொள்ள வேண்டும். 

ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி நமூனாக்கள் மற்றும் வரித் தாக்கலை https://www.gst.gov.in வலைத்தளத்தில் மேற்கொள்ள வேண்டும். 

வணிகர்களின் நலன் கருதி ஜூலை மற்றும் ஆகஸ்டு 2017 மாத நமூனாக்கள் வலைத்தளம் மூலம் தாக்கல் செய்ய கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

ஐ.ஜி.எஸ்.டி., சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி சட்டங்களுக்கு ஒரே மாதந்திர நமூனா தாக்கல் செய்தால் போதுமானது. 

வணிகர்களுக்கு இடையே (Business to Business) பரிவர்த்தனை செய்பவர்கள் பட்டியல் வாரியாக விற்பனை விவரங்களைத் தரப்பட வேண்டும்.

நுகர்வோருக்கு (Business to Consumer) நடைபெறும் சில்லறை விற்பனைகளின் மொத்தத் தொகை பட்டியலினை வழங்குவது போதுமானது.

வரி செலுத்துதல் - (Tax Payment)

வணிகர்கள் வரி மற்றும் இதரக் கட்டணங்களை 100 சதவிகிதம் இணையம் மூலமாகவே செலுத்தப்பட வேண்டும். 

வரி செலுத்தும் வழிகள்!

GST

இணைய வழி (Internet Banking)

கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு

என்.இ.எஃப்.டி., (NEFT), ஆர்.டி.ஜி.எஸ்., (RTGS)

ஓ.டி.சி (Over the Counter Payment - OTC)

OTC முறையில் ஒரு மாதத்துக்கு ரூ.10,000 வரை வங்கியில் செலுத்தலாம்.

மின்னணு பேரேடு (Electronic Ledger)

1) மின்னணு பணப் பேரேடு (Electronic Cash Ledger)

வணிகர் செலுத்தும் பணமானது மின்னணு பணப்பேரேட்டில் தானாகவே வரவு வைக்கப்படும்.

2) மின்னணு வரவுப் பேரேடு (Electronic Credit Ledger)

நமூனாக்களின் மூலமாக கோரும் உள்ளீட்டு வரி வரவு மின்னணு வரவுப் பேரேட்டில் வரவு வைக்கப்படும்.

உள்ளீட்டு வரி வரவினை (ITC Credit) செலுத்தப்பட வேண்டிய வரிக்கு (Output Tax) வணிகர் ஈடு செய்து கொள்ளலாம். 

3) மின்னணு கேட்புப் பேரேடு (Electronic Liability Register)

வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி மற்றும் இதரக் கேட்புகள் இந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.

மேற்கண்ட பதிவேடுகளில் உள்ள பதிவுகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் வணிகர் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு இணையதள வழியாக விண்ணப்பித்து சரி செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close