Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐன்ஸ்டீன் சொன்ன உலகின் `எட்டாவது அதிசயம்' பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

நாம் அனைவரும் மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக, சிறுகச் சிறுக முதலீடு செய்துகொண்டே இருந்தால், ஒருநாள் நம் முதலீடு நல்ல வருமானத்தை ஈட்ட வாய்ப்பு உள்ளது. அன்று, நாம் உழைக்காமலேயே சம்பாதித்துக்கொண்டிருப்போம். எனினும், நாம் பலரும் அறிந்த, தெரிந்த, சில சமயம் மறந்த உண்மைகளை நினைவூட்டவேண்டியுள்ளது. மக்கள் மனதில், உண்மையான முதலீடு பற்றி ஒரு தெளிவு பிறக்க வேண்டும். அப்படித் தெளிவு பிறந்தால்தான், தன்னம்பிக்கையோடும் புதிய உத்வேகத்தோடும் முதலீடு செய்ய முடியும்.  

ஐன்ஸ்டீன், முதலீடு

இந்த நிலையில் முதலீட்டின் அவசியம்குறித்து ஈஸி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பி.ராமசுவாமியிடம் பேசினோம்...

``சேமிப்புக்குப் பேர்போன  இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களிடம், சேமிப்பைப் பற்றியோ அல்லது முதலீட்டைப் பற்றியோ பேசுவது, திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதுபோல. ஒளவையாரின் கூற்றின்படி `கற்றது கையளவு... கல்லாதது உலகளவு'. கல்லாததை கற்றுக்கொண்டால்தான் வாழ்க்கையிலும், முதலீட்டிலும் வெற்றிபெற முடியும். கல்லாததைக் கற்றுக்கொள்வோம். கற்றதை நினைவூட்டிக்கொள்வோம்!

உலகின் 8-வது அதிசயம்! 

உலக அதிசங்கள் ஏழு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். உலகத்தில் எட்டாவது அதிசயம் ஒன்று உள்ளது என்பது, பலரும் அறியாத ஒன்று. அந்த எட்டாவது அதிசயம் எது தெரியுமா? கூட்டுவட்டி (Compound Interest). இதைக் கூறியது, 1921-ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஒரு முதலீட்டில் ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்து வட்டிக்கு வட்டி கிடைத்தால், அது கூட்டு வட்டி. உதாரணத்துக்கு, நாம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். வட்டி (Interest) 10 சதவிகிதம் என்றால், வருடக் கடைசியில் அந்த முதலீட்டின் மதிப்பு 1,10,000 ரூபாய் (முதலீடு 1,00,000 + வட்டி 10,000). அடுத்த வருடம் இதே 10 சதவிகிதம் வட்டி கிடைத்தால், வருடக் கடைசியில் 1,21,000 ரூபாய் என்று வளர்ந்திருக்கும் (முதலீடு 1,10,000+ வட்டி ரூ.11,000). 

முதலீடு, ஐன்ஸ்டீன்முதல் வருடம் 10,000 ரூபாய் வட்டி என்றால், இரண்டாம் வருடம் 11,000 ரூபாயாக வட்டி உயர்ந்திருக்கும். உங்கள் முதலீடு ஒரு லட்சம் ரூபாய் என்றாலும், வட்டிக்கு வட்டி கிடைத்ததால் அடுத்த அடுத்த வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். நம்மில் பலர், `என்ன சார், ஆயிரம் ரூபாய்தானே அதிகமாகக் கிடைக்கிறது' என அலட்சியமாக இதை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால், இதேபோல் பத்து வருடங்களுக்குத் தொடர்ந்தால், பத்தாவது வருடத்தின் உங்கள் முதலீட்டின் வட்டி 23,579 ரூபாய். இருபதாவது ஆண்டின் வட்டி 61,159 ரூபாய். முப்பதாவது ஆண்டின் வட்டி 1,58,630 ரூபாய். 

இதில் அதிசயம் என்னவென்றால், வட்டி என்னவோ அதே 10 சதவிகிதம்தான். நம் முதலீடும் ஒரு லட்சம் ரூபாய்தான். ஆனால், வருடங்கள் கூடக்கூட வட்டியும் கூடிக்கொண்டே இருக்கும். இதை `Exponential Growth' என்பார்கள். ஒரு லட்சம் ரூபாய், 10 சதவிகிதம் வட்டியில் 30 வருடங்களுக்குப் பிறகு 17,44,940 ரூபாயாக வளர்ந்திருக்கும். அதே ஒரு லட்சம் ரூபாய், அதே 30 வருடங்களில் 20 சதவிகிதம் வட்டியில் 2,37,37,631 ரூபாயாக ஆக உயர்ந்திருக்கும். ஆம், இரண்டு கோடி ரூபாய்க்குமேல் வளர்ந்திருக்கும். இதனால்தான் கூட்டுவட்டியை ஐன்ஸ்டீன் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார்."

இனிமேலாவது `எட்டாவது அதிசயம்' பற்றி உணர்ந்து அதை எட்டிப்பிடிப்போமாக!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close