Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வந்தார் நிலேகனி - உயர்ந்தது இன்ஃபோஸிஸ் பங்குகள்

நேற்றைய பங்குச்சந்தை முடிவில், கடந்த சில நாள்களாகக் குறைந்துவந்த இன்ஃபோஸிஸின் பங்குகள் உயரத்துவங்கின. அதன் சேர்மனாக இன்ஃபோஸிஸின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி பொறுப்பேற்றதால், 3 சதவிகிதம் அளவிற்கு வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குகளின் விலை உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது. நிர்வாகக் குழுவிற்கும் நிறுவனர்களுக்கும் இடையே நிலவும் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என்கிற நம்பிக்கையை நந்தனின் வருகை கொடுத்துள்ளதே, பங்குகள் உயர்வடைந்ததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.   

நந்தன் நிலகேனி

பல மாதங்களாகவே போர்டு உறுப்பினர்களுக்கும் நிறுவனர்களுக்கும் கார்ப்போரேட் நிர்வாகம் தொடர்பான விவகாரம் தொடங்கி பல்வேறு விஷயங்கள்குறித்து கடும் கருத்து மோதல்கள் இருந்துவந்தன. இந்நிலையில், அந்த மோதல்களைக் கடந்து நந்தன் நிலேகனி கடந்த வியாழன் அன்று பொறுப்பேற்றுக்கொண்டது அதன் நிறுவனர் நாராயணமூர்த்திக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே, இன்ஃபோஸிஸின் சில நிறுவனர்கள் 1,300 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் பங்குகளைத் தாமே பணம் கொடுத்து திரும்பப் பெறுவதற்கு முன்வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்த அறிவிப்பும் நிறுவனத்தின்மீது நம்பிக்கையை அளித்தது. 

நீலேகனி, அதன் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த( 2002-07) காலகட்டத்தில்தான், அதன் வருட வருமானம் 50 கோடி டாலர்களிலி ருந்து 200 கோடி டாலர்களாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close