Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹலோ ட்யூன் வச்சு கடுப்பேத்துறாங்க மை லார்ட்..! - ஹலோ ட்யூன் அக்கப்போர்கள்

ஹலோ ட்யூன்கள் அறிமுகமான காலகட்டத்திலிருந்து இன்றுவரை அதற்காக மவுஸ் குறையவே இல்லை. எம்.ஜி.ஆர் - சிவாஜி பாடல்களில் ஆரம்பித்து இளையராஜா மெலடிப் பாடல்கள், அனிருத்தின் அராத்தான பாடல்கள் என வெறித்தனமாக ஹலோ ட்யூன் வைக்கும் மகான்கள் நம்மோடுதான் வாழ்கிறார்கள். ஹலோ ட்யூன்கள் என்கிற பெயரில் அவர்கள் செய்யும் அக்கப்போர்கள் இதோ...

வடிவேலு

மெசேஜ் அனுப்பியே சாவடிப்பாங்க:

ஹலோ ட்யூன் வச்சிருக்க ஒருத்தருக்கு நாம கால் பண்ணும்போது, உடனே ஒரு மெசேஜ் நம்ம போனுக்கு வரும். அது என்னான்னு பார்த்தா அவர் வச்சுருக்க ஹலோட்யூனை நாமளும் வைக்கணும்னா ஒரு நம்பரைக் கொடுத்து அதுக்கு கால் பண்ணுங்கனு சொல்லுவாங்க. ‘அடேய், நான் இன்னும் அந்த ஹலோட்யூனை கேட்கவே இல்லையேடா. அதுக்குள்ள மெசேஜ் அனுப்பிட்டீங்க’னு நாம ஆச்சர்யப்படுற அளவுக்கு கம்பெனிக்காரங்க செயல்படுவாய்ங்க. இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்பறம், ஹலோ ட்யூன் வச்சிருக்க ஆளுக்கு கால் பண்ணணும்னு நெனச்சாலே நமக்கு மெசேஜ் வரும்போல..!

இந்த ஹலோட்யூனை காபி செய்ய...:

மெசேஜ் ஒரு பக்கம் வந்து தொல்லைக்கொடுத்தா, இந்த கம்ப்யூட்டர் வாய்ஸ் ஒரு பக்கம் நம்மளைக் கடுப்பேத்தும். ஹலோ ட்யூன் வச்சிருக்க ஆளுக்கு கால் பண்ணினதும், ‘இந்த ஹலோட்யூனை காபி செய்ய ஸ்டார் மற்றும் ஒன்பதை அழுத்தவும். கட்டணங்களுக்கு உட்பட்டது’னு ஒரு கம்ப்யூட்டர் வாய்ஸ் வரும். அதுக்கப்பறம்தான் அந்தப் பாட்டை நாம கேட்க முடியும். ஆனா, சில அவசரக்குடுக்கைகள் அந்த கம்ப்யூட்டர் வாய்ஸ் முடியிறதுக்குள்ளேயே போனை எடுத்துருவாய்ங்க. அப்பறம் எதுக்குடா ஹலோ ட்யூன் வைக்கிறீங்க..?! 

பாட்டுப் பாடி சாவடிப்பானுங்க:

ஹலோ ட்யூன் வச்சு நம்மளை சாவடிக்கிறவங்க ஒரு பக்கம்னா, நாம ஹலோ ட்யூன் வச்சா நம்மளை சாவடிக்கவும் ஒரு குரூப் இருக்காங்க பாஸ். நாம ஒரு நல்ல மெலடி பாட்டை ஹலோட்யூனாக வைக்கிறோம் என்றால் அது நம் காதுக்கும், மனதுக்கும் நாமே வைத்துக்கொள்கிற சூனியம். நமக்கு கால் பண்ற சில அல்லு சில்லுகள் நம் ஹலோட்யூனை கேட்டுக்கொண்டே அவர்களும் பாடத் தொடங்கிடுவாங்க. ‘மனசுல கவிபேரரசு, ஏ.ஆர்.ரஹ்மான்னு நெனப்பு’. அவனுங்க பாடிக்கிட்டிருக்கும்போது நாம போனை எடுத்திட்டா வேற வழியில்ல, அந்தக் கருமத்தை நாமளும் கேட்டுத்தான் ஆகணும். அதுக்கு ஆயத்தமா நம்ம காதையும், மனசையும் தயார்படுத்திக்கணும். 

வடிவேலு

ஆமா, இது என்ன பாட்டு:

ஒரு பாட்டோட ஆரம்பத்தைத்தான் முன்னாடியெல்லாம் ஹலோட்யூனா வைப்பாங்க. அதை கேட்டவுடனே என்ன பாட்டு, என்ன படம்னு ஓரளவுக்குக் கண்டுபிடிக்க முடிஞ்சது. ஆனா, கட் சாங்ஸ் மாதிரி பாட்டோட சரணத்தை மட்டும் ஹலோட்யூனா வைக்கிற ட்ரெண்ட் வந்ததுக்கு அப்பறம் இது என்ன பாட்டு, என்ன படம்னு தெரியாம முழிக்கவேண்டியதா இருக்கு. பத்து தடவை ஃபுல்லா கேட்டாலும் அந்தப் பாட்டை கண்டுபிடிக்க முடியாம, பதினோராவது தடவ, ‘நீ வச்சிருக்க பாட்டு என்ன படம், என்ன பாட்டு’னு ஹலோ ட்யூன் வச்சிருக்கிற ஆள்கிட்டயே கேட்டு தெரிஞ்சிப்போம். இதுல ப்யூட்டி என்னான்னா, நாம எதுக்காக போன் பண்ணினோம்கிறதையே மறந்து, ஹலோ ட்யூன் பத்தி விசாரிச்சுட்டு போனை வச்சிடுவோம். அட கடவுளே!

காசு, பணம் துட்டு மணி... மணி...

காசு எல்லாம் எனக்குப் பெரிய விஷயமே இல்லைன்னு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மாதிரி சுத்திட்டு இருக்கிறவங்களுக்கு இந்த பாயின்ட் ஒத்துவராது. ஹலோ ட்யூன் வச்சு பழக்கம் இல்லாத ஆளுக்கும் சில பேரோட ஹலோட்யூனை கேட்கும்போது, அந்தப் பாட்டை நாமளும் வைக்கலாமேனு தோணும். அந்த ஆசையில நீங்களும் வச்சிருவீங்க. அதுக்கப்பறம்தான் தெரியும், பாட்டை காபி பண்ண ஒரு ரேட், அதை 10 நாளுக்கு ஹலோட்யூனா வைக்க ஒரு ரேட், ஒரு மாசத்துக்கு வைக்க ஒரு ரேட்னு பல பேக்கேஜுகள் போடுவாங்க. இனிமேல் ஹலோ ட்யூன் வைக்கிற ஆசை வருமா உங்களுக்கு..?!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close