Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 ஆண்டுகள் டி.வி.எஸ். அப்பாச்சி RTR சீறியதா... சறுக்கியதா? #TVSApache

டி.வி.எஸ் அப்பாச்சி RTR... ரேஸ் ட்ராக்குகளில் பைக் ஓட்டக்கூடிய / ஓட்டிக்கொண்டிருக்கும் பலரும், முதன்முறையாக அங்கே ஓட்டிய பைக் இதுவாகத்தான் இருக்கும். இப்படி ரேஸ் ட்ராக்கில் பிறந்து சாலைகளுக்கு வந்த அப்பாச்சி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறப்பான பைக்குகளில் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி

முதன்முதலில் 150சிசி மாடலாக, கடந்த 2005-ம் ஆண்டில் அறிமுகமான அப்பாச்சி, 150 E-Surge, சுஸூகி ஃபியரோ F2 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு ரேஸ் பைக்குக்கான அம்சங்களுடன், RTR என்ற அடைமொழியுடன் அப்பாச்சி களமிறங்கியது 2007-ம் ஆண்டில்தான்! எனவே, இந்தியாவில் அப்பாச்சி RTR பைக்கின் ஆதிக்கம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

 

2007: டி.வி.எஸ் அப்பாச்சி RTR 160

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் ஒரு பைக், ரேஸ் பைக்கின் திறனுடன் வெளிவந்ததில்லை என்ற கூற்றுக்கு, சரியான தீர்வாக அமைந்தது அப்பாச்சி RTR பைக். ரேஸிங்கில் 33 வருட அனுபவத்தைக்கொண்டிருக்கும் டி.வி.எஸ் தயாரித்த அப்பாச்சி RTR பைக்கை வடிவமைத்த பொறியாளர்கள் குழுவில் இருந்த பலரும் பைக்கர்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது.

tvs apache

அப்பாச்சி RTR வரலாற்றில், Over Square வகை இன்ஜினுடன் வெளிவந்த அப்பாச்சி RTR 160-ல் இருந்த இன்ஜின், அதன் போட்டியாளர்களைவிட அதிக பவரை வெளிப்படுத்தியதுடன், குறைவான எடையையும் கொண்டிருந்தது. மேலும், ரேஸ் ட்ராக்கிலும், சாலையிலும் சிறப்பான ஆளுமையை அளிக்கக்கூடிய சேஸி தவிர, இந்தியாவிலேயே முதன்முறையாக பெட்டல் டிஸ்க் பயன்படுத்தப்பட்டது அப்பாச்சி RTR-ல்தான்.  இவை எல்லாம் ஒன்றுசேரும்போது, நன்கு ரெவ் ஆகி வேகமெடுக்கக்கூடிய, நினைத்த நேரத்தில் நிறுத்தக்கூடிய பைக்காக அப்பாச்சி RTR உருவானதன் சுவையான பின்னணி இதுதான்! 

 

2009: டி.வி.எஸ் அப்பாச்சி RTR 180

RTR 180 ABS

`இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பைக்குகளில் ஏ.பி.எஸ் உடன் வெளிவந்த முதல் பைக்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான அப்பாச்சி RTR 180, அப்பாச்சி RTR 160-யைவிடக் கூடுதலான பெர்ஃபாமன்ஸ் வேண்டும் என்பவர்களுக்கான விடையாக அமைந்தது. இந்தியாவில் ஸ்டைலைவிட பெர்ஃபாமன்ஸுக்கே முக்கியத்துவம் அதிகம் என்ற மனநிலையில் டி.வி.எஸ் இருந்ததாலேயே, இந்த 10 ஆண்டுகளில் தனக்கென ஒரு நம்பகத்தன்மையான ரசிகர் வட்டத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. 

 

2012: டி.வி.எஸ் அப்பாச்சி RTR ஃபேஸ்லிஃப்ட்

apache matte edition

பைக்கின் பெர்ஃபாமன்ஸ் நன்றாக இருந்தாலும், நீண்ட நாள்களாக டிசைனில் மாற்றமில்லை என்ற காரணத்தாலேயே, போட்டியாளர்களைவிட விற்பனை எண்ணிக்கையில் அப்பாச்சி RTR, பல சந்தர்ப்பங்களில் பின்தங்கியும் இருக்கிறது. இதை சரிசெய்யும் பொருட்டு, டி.வி.எஸ் 2012-ம் ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அப்பாச்சி RTR பைக்கை வெளியிட்டது. ஆனால், இது டி.வி.எஸ் நிறுவனமே எதிர்பார்க்காத வகையில், அதன் ரசிகர்களிடையே கலவையான கருத்துகளை ஏற்படுத்தியதுதான் சோதனை. தொழில்நுட்பரீதியிலும் அப்பாச்சி RTR, காலப்போக்கில் வளர்ந்துகொண்டுதான் இருந்தது. 

 

2016: டி.வி.எஸ் அப்பாச்சி RTR 200 4V

RTR 200 4V

ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், ஏ.பி.எஸ், 4 வால்வு, ஆயில் கூலர், மோனோஷாக், LED DRL, டிஜிட்டல் டயல்கள் போன்ற வசதிகளுடன் பக்காவான ஸ்ட்ரீட் ஃபைட்டர் டிசைன் மற்றும் சிறப்பான ஆளுமையுடன்கூடிய பெர்ஃபாமன்ஸ் என மிகப்பெரிய அளவில் முன்னேறிய தயாரிப்பாக கடந்த ஆண்டு வெளிவந்தது அப்பாச்சி RTR 200. கார்ப்பரேட்டர் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷன்களைக்கொண்டிருந்த 197.75சிசி இன்ஜின், 21bhp பவரை வெளிப்படுத்துகிறது. `Indian Bike of the Year' உள்பட இந்திய ஆட்டோமொபைல் துறையின் பல உயரிய விருதுகளைப் பெற்ற அப்பாச்சி RTR 200, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக இருக்கிறது.

 

2017: டி.வி.எஸ் அப்பாச்சி RR 310 S

RR 310 S 

தற்போது பி.எம்.டபிள்யூ-வுடன் கூட்டணி அமைத்திருக்கும் டி.வி.எஸ், அந்த நிறுவனத்தின் G310R ஸ்ட்ரீட் பைக்கை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டு டி.வி.எஸ் வடிவமைத்த ஃபுல் பேரிங்கொண்ட பைக்தான் `அக்குலா 310'. இதை கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எனவே, பெர்ஃபாமன்ஸ் பைக் செக்மென்ட்டில், தனது மார்க்கெட் ஷேரை அதிகப்படுத்தும்விதமாக, அப்பாச்சி RR310S எனும் பைக்கை இந்த ஆண்டில் களமிறக்க உள்ளது டி.வி.எஸ்! 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close