Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீடியோகேம் ஸ்டைலில் நம் அரசியல்வாதிகளுக்கும் கொடுப்போமா டாஸ்க்..!

ந்த காலத்தில் மணலில் உருண்டு புரண்டு பலவிதமான விளையாட்டுகளை விளையாடி இருப்போம். ஆனால், இந்த காலத்தில் மைதானத்திற்கு போய் விளையாடும் குழந்தைகளை விட வீட்டிலேயே உட்கார்ந்து மொபைலிலோ கம்யூட்டரிலோ தான் தங்கள் பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் சிலர் வீட்டிற்குள் இருப்பதையே விளையாட்டாக மாற்றிவிட்டனர். காரணம், தினம் ஒரு டாஸ்க் கொடுத்து அதை செய்து முடித்தால் அடுத்த டாஸ்க் என்று போய்க்கொண்டே இருக்கிறது அந்த கேம் உலகம். நாமும் கேமாக மாறி அரசியல்வாதிகளுக்கு டாஸ்க் கொடுத்தால் என்னெல்லாம் கொடுத்திருப்போம்..? ஒரு சிறிய கற்பனை...

டாஸ்க்

* தேர்தலில் நிக்குறதுனு முடிவு எடுக்கும்போதே, ஜெயிக்கிறாங்களோ இல்லையோ இந்த டாஸ்க் விளையாட்டை இன்ஸ்டால் பண்ணனும்கிறதை  முதல் கட்டளையாப் போடணும்!

*இப்போதெல்லாம் ஓட்டு கேக்க வந்ததுக்குப் பிறகு தொகுதி பக்கம் தலை வச்சே படுக்கறது இல்லை நம்ம அரசியல்வாதிகள். அதனால், தேர்தல்ல ஜெயிச்சா முதல் டாஸ்க் ஜெயிச்ச 2 நாட்களுக்குள் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்தே ஆகணும்கிறதுதான்! 

* மாதம் இரண்டு முறை தன்னோட தொகுதிக்குப் போய் மக்களை சந்திக்கணும். சந்திச்சா மட்டும் போதுமா..? `மாரியம்மன் கோவில் தேரு, 18 வது வார்டு மக்களோடு நான்!' என்று ஸ்டேடஸ் அப்லோட் பண்ணியே ஆகணும். டாட். 

* மக்களை சந்தித்தப் பிறகு அவர்கள் எடுத்து வைத்த குறைகளைத் தீர்த்து வைக்க கால அவகாசம் கேட்கணும். அவர்களாகவே வான்டடாக வந்து கொடுத்த கெடு தேதிக்குள் குறைகளைத் தீர்க்கணும். இதுக்கு கேம் ஆப்ஸ்ல வர்ற மக்களோட ரிவ்யூஸ் வெச்சுதான் அடுத்த டாஸ்க்கே போக முடியும். இல்லைனா டாஸ்க் நான்ட் கம்ப்ளீட்டட்.  

*மாதம் இரண்டு முறை மக்களை சந்திப்பது போல அந்தத் தொகுதியில்  முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு மீட்டிங் போட்டு அவர்களின் குறைகளைக் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவங்க வேலைகள் எப்படிப் போகுதுன்னும் தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் கேமில் இருந்து எலிமினேட் ஆக வேண்டியதிருக்கும். 

* வாரம் ஒரு முறை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குப் போய் ஆய்வு செஞ்சு பிரச்னைகளைத் தீர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டாஸ்க் கொடுக்கணும். அவங்க அதை முடிச்ச உடனே  டாஸ்க் கம்ளீட்டட்னு போட்டோவுடன் ஸ்டேடஸ் போடணும். 

 

அரசியல்

* அடிக்கடி மாநாடு, கட்சிக் கூட்டம்னு சொல்லி நடுரோட்டுல பேனர் வெச்சு மக்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது. அப்படி தொகுதிப்பக்கம் எதவாது போர்டு அல்லது பேனர் இருந்தால் அதை போட்டோ எடுத்து யாரேனும் ரிவ்யூ பக்கத்தில் போஸ்ட் செய்தால் `டாஸ்க் நாட் கம்ப்ளீட்டட்' தான். அப்புறம் என்ன... உடனே எலிமினேஷன் தான்! 

* பொது கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படணும். பயோ டாய்லெட் இருக்கணும். இயற்கை விவசாயம் பண்றவங்களை ஊக்குவிச்சு கெளரவப்படுத்தணும். பசுமை கிராம், பசுமை நகரம், பசுமைத் தொகுதினு வருஷம் ஒரு முறை விருதுகள் கொடுக்கணும். அப்படி செய்தால் டபுள் புரொமோஷன்தான். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் திறமையான ஆசிரியர்களை நியமிச்சு, பசங்களோட படிப்பை உயர்த்த முன் வரணும். இப்படி செய்பவர்களே வின்னர்!

* ஒரு திட்டம் செயல்படப் போகுதுனா அதற்கான மதிப்பு தொகையை மக்கள் கிட்ட சொல்லணும். அந்தத் திட்டத்துக்கு எவ்ளோ ஒதுக்கி இருக்கு, எவ்ளோ செலவு ஆகி இருக்கு, மீதி எவ்ளோ இருக்குனு புள்ளி விவரத்தோட மக்கள் முன்னாடி சமர்ப்பிக்கணும். இதுல ஏதாவது கோல்மால் நடந்தால் உடனடியா பதவி நீக்கம் அது மட்டுமல்லாமல் ஏமாற்றிய தொகையின் இரண்டு மடங்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக கொடுக்கணும். டீலா... நோ டீலா?

* மக்கள் முன்னாடிப் பேசுற கூட்டத்துல கட்சி பத்தியோ கட்சி தலைவர் பத்தியோ பில்டப் பண்ணிப் பேசக்கூடாது. பேசினால், ஒரு மாதம் சம்பளம் `கட்' ஆகிவிடும்.

* எம்.எல்.ஏ சரியில்லை ஆட்சி சரியில்லைனு மக்கள் போராட்டம் செஞ்சு ஒரு எல்லைக்கு மேல் போனால் மறு தேர்தல்தான். அதில் ஜெயிக்கும் நபர் அந்தப் பிரச்சனையை தீர்த்துட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கணும். 

* லஞ்சம் வாங்குற அதிகாரிகளை ஒரு வருஷம் இடை நீக்கம் செய்யணும். அப்படி அவங்களைக் காப்பாத்த யாரேனும் முயற்சி செஞ்சா அவங்களுக்கும் இடை நீக்கம்தான். 

 

கேம்

* அடுத்த தேர்தலில் நிக்கணும்னா கடந்த தேர்தலில் என்ன எல்லாம் பண்ணிருக்காங்கனு ஸ்டேடஸ் போட்டதை பார்த்துதான் நிக்கலாமா கூடாதானு அட்மின்கிட்ட இருந்து பதில் வரும். 

* மேலே சொன்ன லிஸ்ட்ல ஏதாவது ஒண்ணு செய்யலைனாலும் அவங்களோட சொத்துக்கள் முடக்கப்படும். ஃபேஸ்புக், போன், ட்விட்டர் அக்கவுண்ட் எல்லாம் ஹேக் செஞ்சு ரகசியம் வெளியிடப்படும். 

* கடைசியாக... கட்சி தாவினாலோ அணி மாறினாலோ அடுத்தத் தேர்தலில் நிற்கக் கூடாது. அப்படி நின்றால் கேமில் இருந்து அவுட்!  

என்ன அரசியல்வாதிகளே... கேம் விளைடாட ரெடி ஆகிட்டீங்களா..? தேர்தலில் நிற்கத் தயாராகிட்டீங்களா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close