Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படக் குறைந்தபட்ச தேவை இதுவே!

பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் பங்கு முதலீட்டாளர்கள் முதல் பழுத்த பணக்கார வியாபாரிகள் வரை, எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குகளை வாங்கி விற்பனை செய்கின்றனர். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு உலகளவில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பங்குகளை வாங்குபவர்களாகவும் விற்பவர்களாகவும், தனிநபர் முதலீட்டாளர்களாகவும் இருந்தனர். காலப்போக்கில், பெரிய நிறுவனம் முதல் சிறிய முதலீட்டாளர்கள் வரை பலரும் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்துவருகின்றனர். 

நிறுவனம்

அதேசமயம், பங்குச்சந்தை என்பது நிறுவனங்கள் தங்கள் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. பொதுச்சந்தையில் தொழில்களைப் பொதுவில் வியாபாரப்படுத்தவும், நிறுவனத்தின் உரிமத்துவ பங்குகளை விற்றுக் கூடுதல் முதலீட்டுத் தொகையைப் பெறவும் வழிவகுக்கிறது. இதுமட்டுமின்றி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் வெளிப்­ப­டை­யாக செயல்­ப­டவும், ஒழுங்­கு ­மு­றை­யான நிர்­வாக நடை­மு­றை­க­ளுக்கும், சந்­தையில் ஆரோக்­கி­ய­மான போட்­டியை எதிர்­கொள்­ளவும் துணைபுரிகிறது. அனைத்­துக்கும் மேலாக, நிறு­வ­னங்­களின் செயல்­பா­டுகள் அனைத்தும், பங்கு முத­லீட்­டா­ளர்­களின் ஒப்­பு­த­லுடன்தான் நடை­பெற முடியும். 

பொதுவாக லாப­க­ர­மான நிறு­வ­னங்கள் பெரும்பாலும் பொது­மக்­க­ளுக்கு பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்டி தங்களது வணிகத்தை மேலும் விரிவுபடுத்த விரும்புகின்றன. இதற்­காக, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, செபியின் விதி­மு­றை­களைப் பின்­பற்றி, நிர்­வாகச் செயல்­பாடு­களை ஒழுங்­கு­ப­டுத்தி தங்களது பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுகின்றன. ஆனால், எல்லா நிறுவனங்களும் தங்களது பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது. ஒரு நிறுவனத்தின் லாபம், நிகர சொத்து மதிப்பு உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களின் அடிப்­ப­டையில்தான் பங்கு வெளி­யீட்­டுக்கான நிறு­வ­னங்கள் தேர்வு செய்­யப்­படுகின்றன. இதற்­கென குறிப்பிட்ட சில விதி­மு­றைகள் உள்ளன. விதி­மு­றை­களைப் பூர்த்தி செய்த, தகு­தி­யான நிறு­வ­னங்கள் மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிட முடிகிறது. 

இந்த நிலையில், பங்குச் சந்தையில் ஒரு புதிய நிறுவனம் பட்டியலிட குறைந்தபட்ச தேவை குறித்து பங்குச்சந்தை நிபுணர் அருள்ராஜனிடம் பேசினோம். 

பங்குச் சந்தை"நபர் ஒருவர் தனது சொந்த பணத்தில் 10 கோடி ரூபாய்க்கு வணிகம் ஒன்றைச் செய்துவருகிறார் என வைத்துக் கொள்வோம். இந்த வணிகத்தைப் பெரிய அளவில் வளர்க்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார். அதற்குக் குறைந்தது 50 கோடி ரூபாய் தேவை. ஆனால், அவரிடம் போதிய பணம் இல்லை. இந்த 50 கோடி ரூபாயைத் திரட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம். கடனாக வாங்கினாலும் சொத்தை விற்க வேண்டியது வரும் அல்லது அடகு வைக்க வேண்டியது இருக்கும். அதேநேரத்தில் அந்தக் கடனுக்கு உண்டான வட்டியைத் தொடர்ந்து கட்ட வேண்டியது வரும். இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு பொதுமக்களிடம் பணத்தை நிதி திரட்டி வெற்றிகரமாகத் தொழிலை நடத்த வாய்ப்புகள் இருக்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிட்டால் யாரும் உடனே பணத்தைக் கொடு எனக் கேட்கப்போவதில்லை. நீண்ட கால அடிப்படையில் அந்தப் பணத்தை முதலீடாக மட்டுமே பார்ப்பார்கள். 

பங்குச் சந்தையில் ஏற்கெனவே 2000-க்கும் அதிகமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன. இப்போது புதியதாக ஒரு நிறுவனம் முதலில் பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டும், பணம் திரட்ட வேண்டும் என்றால் செபியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். இதில் செபி ஏற்கெனவே விதித்துள்ள பல விதிமுறைகளை அந்நிறுவனம் பின்பற்ற வேண்டும். குறிப்பாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நிறுவனம் லாபம் சம்பாதித்து இருக்க வேண்டும். அவர்களுடைய லாபம் மற்றும் நஷ்டம் சம்பந்தமான அறிக்கை மற்றும் பேலன்ஸ்சீட்டை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதி அதாவது நிறுவனத்தின் வெளியீட்டு மதிப்பு 10 கோடி ரூபாய் ஆக இருக்க வேண்டும். அதேநேரத்தில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 25 கோடி ரூபாய் ஆக இருக்க வேண்டும். கூடுதலாக நிர்வாகக்குழு சம்பந்தமான விவரம், புரிந்துணர்வு ஒப்பந்தம், கட்டணம் மற்றும் ஆவணங்கள் என ஒரு நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்குத் தேவையான குறைந்தபட்ச விஷயங்கள் ஆகும்" என்றார் அவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close