Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீம் க்ரியேட்டர்ஸுக்காக ஒரு ஸ்பெஷல் பாட்டு! - மீம் ஆன்தம் உருவான பின்னணி!

“தினம் தினம் காலையில் எந்திரிச்சதுல இருந்து நைட்டு தூங்குற வரைக்கும் குறைஞ்சபட்சம் ஒரு மீமாவது கடக்காம நம்மளோட ஒருநாள் பொழுது முடியுறதில்லை. சமூகத்துல எந்த ஒரு பிரச்னையா இருந்தாலும் ஒருபக்க கட்டுரைக்கு உரிய அதே தாக்கம் ஒரு 10 byte மீம்ஸ்லயும் இருக்கேன்னு தோணுச்சு. எல்லா பிரச்சனைக்கும் முதல் ஆளா அட்டெண்டஸ் போடுற மீம் க்ரியேட்டர்ஸுக்கு லீவே கிடையாதுல்ல, அவங்களுக்கு நன்றி சொல்ற விதமா இருக்கட்டுமேன்னு ஆரம்பிச்சதுதான் 'மீம் க்ரியேட்டர்ஸ் ஆன்தம்' என கலகலப்பாக ஆரம்பிக்கிறார் வைசாக். 

''டெம்ப்ளேட்டை நான் தேட...
 மீமத்தான் நான் போட
 ரீச்சாக நான் தேடுறேன்..'' என ட்ரெண்டி வார்த்தைகளால் சமூக வளைதளங்களில் ஹிட் அடித்திருக்கும் 'மீம் கிரியேட்டர் ஆன்தம்' பாடலின் இசையமைப்பாளர் வைஷாக்தான்.

மீம்

'சொந்த ஊரு கேரளா, படிச்சதெல்லாம் ஈரோடுதான். நண்பர்களோட சேர்ந்து ட்ரெண்டி தமிழான்னு ஒரு இசைக்குழு உருவாக்கி, ஆறு ஆல்பங்கள் பண்ணிருக்கேன். காவிரி பிரச்னை, சுவாதி கொலைன்னு ஒவ்வொரு டைம்லயும் எங்களால முடிஞ்ச ஏதாவது பண்ணிட்டு இருந்தோம். ஆனா, எங்க முதல் பிரேக் இந்த ஆல்பம்தான். 

 

 

இந்த ஆல்பம் பண்ணலாம்னு முடிவு பண்ணதும் ட்யூனுக்கேத்த மாதிரி பாடல் வரிகளை யோசிச்சு எழுதிட்டோம். மீம் க்ரியேட்டர்ஸோட கொண்டாட்டத் தருணங்கள், ஒவ்வொரு மீமுக்கும் அவங்க படுற மெனக்கெடல் இதை வச்சு இரண்டு பகுதிகளா பாட்டு எழுதினோம். பாட்டு ரிலீஸானதுமே நல்ல வரவேற்பு. யூடியூப் ட்ரெண்டிங் லிஸ்ட்ல இப்போ எங்க பாட்டு இருக்கு. இந்த வரவேற்பு அடுத்தடுத்து இந்த மாதிரி நிறைய பண்ணணும்னு எங்களுக்கும், எங்களைச் சுத்தி இருக்குறவங்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கு. சம்பந்தப்பட்டவங்களோட மனசு நோகாதமாதிரி விமர்சனம் பண்றது ஒரு கலை. அதை பெரும்பான்மையான மீம் க்ரியேட்டர்கள் சரியா செய்யுறாங்க. அதனால அவங்களுக்கு தர்ற மரியாதைதான் இந்தப் பாட்டு. ஆனா, சில மீம்ஸ்கள் பொறுப்பற்றதன்மையோட இருக்குங்கிற உண்மையையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும். அவங்களும் ஆக்கபூர்வமான முறையில தங்களோட திறமையை நிரூபிப்பாங்கனு நம்புறோம். பார்க்கலாம். 

இப்போ ஆடியோ இன்ஜினீயரிங் கடைசி வருஷம் படிச்சுட்டு இருக்கேன். இன்னும் நிறைய இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள் பண்ணணும்னு ஆசை. வாய்ப்பும் அதிர்ஷ்டமும் இருந்தா சினிமாவுக்கும் ஒர்க் பண்ணுவேன். எந்த வேலையா இருந்தாலும் சரி, மீம் டெம்ப்ளேட் மாதிரி அது அடுத்தவங்களோட மனசுல நச்சுனு பதியணும். அதை நோக்கித்தான் பயணப்பட்டுகிட்டிருக்கேன்' என நம்பிக்கை டச்சோடு முடிக்கிறார் வைஷாக். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close