Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘நான் பொண்ணு இல்ல; பொம்பள!’’ - மோனிகா பெலுச்சி

ஹாலிவுட்டில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்துவிட்ட மோனிகா பெலுச்சிக்கு 50 வயது என்றால் நம்பமாட்டீர்கள். ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரெய்க் நடிக்கும் ‘ஸ்பெக்ட்ர்’ படத்தில் மோனிகாதான் ஹீரோயின்.

சோனி கம்பெனி ஹாக்கிங் செய்யப்பட்டு கதை லீக் ஆனதால், படம் பாதியில் நிறுத்தப்பட்டது; ஜாகுவார், ஆஸ்டன் மார்ட்டின் போன்ற சூப்பர் கார்கள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு மூலையில் முடக்கம் என்று ஏற்கெனவே செம ஹைப்பில் இருக்கும் ‘ஸ்பெக்ட்ர்’ படம், மறுபடியும் செம ஹாட்டாக ஆரம்பிக்கப்பட்டு விட்டது. காரணம், ஹாட் ஹீரோயின் மோனிகா பெல்லுச்சி.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வழக்கமாக வரும் ‘டேம் ஜூடி டென்ச்’ ஆயா கேரக்டருக்குப் பதிலாக, திடீரென ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் மோனிகா. ‘ஆனால், ஜூடி டென்ச்சுக்கு வயது 80. எனக்கு எப்படி இந்த கேரக்டர் செட் ஆகும்?’ என்று மோனிகா விழி பிதுக்க, ‘‘நீங்கதான் ஹீரோயின்!’’ என்று ஜூடி டென்ச் கேரக்டரை ஹீரோயின் கேரக்டராக்கி விட்டாராம் படத்தின் இயக்குநர் சாம் மாண்டிஸ்.

மோனிகாவின் ஸ்பெஷல் என்னவென்றால், செக்ஸ் காட்சிகளில் இயல்பாக நடிப்பதுதான். அதேபோல், அங்கங்களைப் பராமரித்து அழகு கூட்டும் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’க்கு எதிரானவர் மோனிகா. ‘‘ஹால்லி பெர்ரி, ஈவா கிரீன், ஜெம்மா ஆர்டெர்டான் வரிசையில் மோனிகா பெலுச்சியும் இப்போது பாண்ட் கேர்ள் ஆகிவிட்டார்!’ என்று பத்திரிகைகளில் தடதட செய்தி வர, அதை தன்னடக்கமான கோபத்துடன் மறுத்திருக்கிறார் மோனிகா.

‘‘எனக்கு 50 வயது ஆகிவிட்டது. இது வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். இன்னும் நான் பொண்ணு கிடையாது. நான் இப்போது ஒரு மெச்சூர்டான பெண். வயது ஆக ஆக ஒரு பெண்ணுக்கு மரியாதைதான் கிடைக்கும் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள  தயங்குகிறார்கள். இது புரியாமல், பெண்கள் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்கள் அழகைப் பாழடிக்கிறார்கள். என் முகத்தில் சுருக்கங்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இனிமேல் என்னை இளமையாகக் காட்டிக்கொள்ள விருப்பம் இல்லை. எனவே, தயவுசெய்து என்னை ‘கேர்ள்’ என்று எழுத வேண்டாம்; ‘பாண்ட் லேடி’ என்றே சொல்லுங்கள்... ப்ளீஸ்..!’’ என்று பத்திரிகைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ‘பாண்ட் பொம்பள!’

வயதைக் குறைத்து வாலிபம் கூட்டும் நடிகைகள் கவனிக்க!

- தமிழ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ