Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக கவனத்தை ஈர்க்கும் இரண்டு அப்பாக்கள்!

லக பெண்கள் தினம் வரவிருக்கும் இந்த மார்ச் முதல் வாரத்தில், இரண்டு அப்பாக்கள் கவனத்தை  ஈர்த்துள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலும், இன்னொருவர் இங்கிலாந்திலும். முதலில் அமெரிக்கா அப்பாவினை பார்ப்போம்.

அமெரிக்க கண்ட நாடுகள் அனைத்திலும் புகழ்பெற்ற கார் பந்தயம் நாஸ்கார். அந்தப் பந்தயத்தில் முண்ணனி வீரராகத் திகழ்பவர் ப்ரெய்ன் ஸ்காட். இவருக்கு கடந்த வாரம் வைட்னி கே என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணமகளிடம் விருந்தினர் அனைவரின் முன்பாக திருமணத்துக்கு ஒப்புதல் கேட்கப்பட்டது. இது வழக்கமான ஒன்றாகிலும்  ப்ரெய்ன் ஸ்காட், வைடினியின் முன்னாள் கணவருக்குப் பிறந்த ப்ரெய்லே என்கிற மூன்று வயதுப் பெண் குழந்தையிடமும் ஒப்புதல் கேட்டார்.

அதன் பின்னர் "நான் உனக்கு தினமும் இரவு உணவின்போது பிரார்த்திக்க சொல்லி கொடுப்பேன். தூங்கப்போகும் முன் கதைகள் சொல்லுவேன். ஒரு சிறந்த கணவனாக உன் அம்மாவுக்கும், மிகச்சிறந்த தந்தையாக உனக்கும் வாழ்ந்து காட்டுவேன்" என்று அந்த மூன்று வயது பெண்ணிடம் உறுதிமொழி கொடுத்தாராம்.

கடந்த 2014 நவம்பரில் வைட்னியுடன் அறிமுகமான ப்ரேய்ன் ஸ்காட், சந்தித்த சில வாரங்களிலேயே அவருடன் இணைந்து வாழ்வது என்று முடிவெடுத்தாராம்." அப்போது இருந்தே ஒரு தந்தையின் கடமைகளை கொஞ்சம் கொஞ்சமாக ப்ரெய்லே எனக்கு புரிய வைத்தாள். ஒரு பெண்ணின் கணவன் என்பதைத் தாண்டி ஒரு பெண்ணின் தந்தை என்கிற பொறுப்பு அற்புதமானது" என்று சிலிர்க்கிறார்.

அடுத்தவர் இங்கிலாந்தின் ஆடம் ஃபிலிப்ஸ். தெற்கு இங்கிலாந்தில் வசிக்கும் பிலிப்ஸுக்கு, டான்யா என்கிற மனைவியும், ஹனி ரெ என்கிற ஒன்றரை வயது மகளும் உண்டு. ஆடம் டான்யாவின் முதல் மகளான ஹனி ரேவுக்கு, பிறக்கும்போதே வலது கால் முழுக்க சிவப்பு நிற மச்சம் பெரிய அளவில் இருந்திருக்கிறது. ஹனி ரேவுடன் ஒருநாள் பார்க்கிற்கு சென்றபோது அங்கு விளையாடிக்கொண்டிருந்த  குழந்தைகள் இந்த மச்சம் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனராம்.

அதை கவனித்த ஆடம், தன் மகள் பெரியவளாகும்போது இந்த மச்சம் அவளுடைய மனதில் எந்தவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று முடிவெடுத்தார். உடனே தன் மனைவி டான்யாவையும் சம்மதிக்க வைத்து, தனது காலிலும், மனைவி காலிலும் மகள் ஹனி ரேவின் காலில் இருப்பது போலவே அச்சு அசலாக டாட்டூ குத்திக்கொண்டனர்.

"இந்த மச்சத்தை வைத்து என் மகளை யாரும் பரிதாபத்துக்குரியவளாக பார்த்துவிடக் கூடாது என்பதால் இது எங்கள் குடும்ப மச்சம் என்கிற மாயத்தோற்றத்தை வளரும் நாட்களில் என் மகளின் மனதில் வளர்க்க இந்த முடிவெடுத்தேன்" என்கிறார் ஆடம்.

மகள்களை பெற்ற அப்பாக்கள் இருக்கும் வரை மகள்களுக்கு கறை ஒரு குறையல்ல !

- செந்தில்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close