Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிலைக்குள் மம்மி: புத்தர் சிலை தந்த புதிர்!

ருங்காட்சியங்களில் பல வருடங்களாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் சிலைகளை திடீரென ஸ்கேன் செய்து பார்த்தால் என்ன நடக்கும்? இப்படி ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறது, நெதர்லாந்து நாட்டின் அசென் நகரிலுள்ள டிரெண்ட்ஸ் என்னும் அருங்காட்சியகம்.

அவர்கள் மேற்கொண்ட முதல்முயற்சியே பலத்த ஆச்சர்யத்தை தந்திருக்கிறது. அந்த அருங்காட்சியகத் தில் இருந்த புத்தர் சிலை ஒன்றை அதிநுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்த, புத்தர் சிலைக்கு உள்ளே எலும் புக்கூடு ஒன்று அமர்ந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

அதை மேலும் பரிசோதனை செய்ததில், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த நிலையில் பதப்படுத்தி, அதன் மேல் புத்தர் சிலையை வடிவமைத்துள்ளதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்ததில், அது சீனாவின் புகழ்பெற்ற ‘சோகுஷின்புட்சு என்ற கலையைப் பயில்வித்த மாஸ்டர் லியுகுவான் என்ற துறவியின் எலும் புக்கூடாக இருக்கலாம் என்றும், இவர் இறப்பிற்கு பின், இவரது உடல் புத்தர் சிலைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம், அல்லது இவரே அமர்ந்த நிலையில் இறந்து, புத்தர்  சிலையை அமைக்க கூறியிருக்கலாம் என்றும் யூகிக்கிறோம்.

எனினும் இதை உறுதி செய்ய, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூட்டின் ஒரு பகுதியை மரபணு சோதனைக்கு அனுப்பியுள்ளோம்.’’ எனக் கூறியுள்ளனர். தற்போது ஹங்கேரி நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் இந்த புத்தர் சிலை, அங்குள்ள அருங்காட்சியகத்தில் மே மாதம் வரை கண்காட்சிக்கு வைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close