Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் ஒரு செல்ஃபி எடுக்கும் புகைப்பட கலைஞர்!

செல்ஃபி கலாச்சாரம், செல்ஃபி மோகம் என்று இந்த ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு தங்களை தாங்களே படம் எடுத்துக்கொள்வதில் உள்ள ஆர்வத்தை எப்படி வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அமெரிக்க புகைப்பட கலைஞர் ஒருவர் செல்ஃபி பழக்கத்திற்கு புதிய அர்த்தத்தை தேடித்தரும் வகையில் சோதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மைக்மெல்லியா (mikemellia) எனும் அந்த புகைப்பட கலைஞர் தினம் ஒரு செல்ஃபி எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து வருகிறார்.

தினம் ஒரு செல்ஃபி எடுத்தால் டாக்டரை நாடிச்செல்லாமல் இருக்கலாம் எனும் கொஞ்சம் கேலியும், கொஞ்சம் கவித்துவமும் கலந்த அறிமுக குறிப்புடன், சளைக்காமல் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது சுயபடங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

தோற்றத்திலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி வழக்கமாக பார்க்க கூடிய அலுப்பூட்டக்கூடிய செல்ஃபிகளில் இருந்து மில்லியாவின் படங்கள் மாறுபட்டிருக்கின்றன. பொதுவாக செல்ஃபிக்கள் அவசர கோலத்தில், உள்ளுணர்வின் உந்துதலால் அல்லது தன்முனைப்பால் எடுக்கப்பட்டதை உணர்த்தும் அல்லவா? அதுபோல அல்லாமல் மில்லியாவின் சுயபடங்கள், நேர்த்தியான கலைபடைப்புகளாக மிளிருகின்றன.

எல்லா படங்களிலும் தோன்றுவது மெல்லியாதான் என்றாலும், ஒவ்வொரு படத்திலும் தனக்கு ஒரு கற்பனையான ஆளுமையை கொடுத்து, அதற்கேற்றார் போல் சிந்திக்க வைக்ககூடிய வகையில் புகைப்பட குறிப்பையும் இடம்பெறச் செய்கிறார்.

உதாரணத்திற்கு, கருப்பு நிற கோட் சூட்டுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் படம், 'அப்போது நான் எப்போதுமே கருப்பு நிறத்தில் இருந்தேன்' என தெரிவிக்கிறது. நேபாளத்தின் மலையேறும் வீரர் போன்றும் இன்னொரு படத்தில் 'அப்போது நான் நேபாள் ஷெர்பாவாக இருந்தேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழந்த சிந்தனையுடன் பெரிய புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருக்கும் படத்தில், 'அப்போது நான் போர்ச்சுகீசிய மடாலயத்தில் தனிமையில் இருந்தேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. சோகமாக காட்சி தரும் இன்னொரு படம், 'அப்போது எங்கள் தொழிற்சங்க தலைவர் லஞ்சம் வாங்கினார்' என தெரிவிக்கிறது. தலை வெட்டப்பட்டிருப்பது போல உள்ள படத்தின் குறிப்பு, 'அப்போது எனது புகைப்படத்தை மனைவி கிராப் செய்த்தார்' என தெரிவிக்கிறது.

ஆனால் எல்லாவற்றையும் விட ஹைலைட் மார்க்சிய தந்தை காரல் மார்க்ஸ் தோற்றத்தில், 'அப்போது நான் உலக தொழிலாளர்களை ஒன்றுபட சொன்னேன்' என சொல்லும் படம் தான்.

ஆக இந்த படங்கள் எதுவுமே சராசரி செல்ஃபிக்கள் இல்லை. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியும், ஒரு செய்தியும் இருக்கிறது. ஒவ்வொரு படமும் அதனளவில் ரசிக்கும் படி இருக்கிறது. தலைப்பு, தினம் ஒரு செல்ஃபி என இருந்தாலும் தினசரி படங்கள் வெளியாகவில்லை, ஆனால் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கின்றன.

அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கம் எட்டிப்பார்க்கும் பழக்கம் கொண்டவர்களும் சரி, இன்ஸ்டகிராம் பக்கமே வராதவர்களும் சரி, மைக் மெல்லியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஓராண்டுக்கும் மேலாக இந்த கலை சோதனை தொடர்கிறது. ''தொழில்நுட்ப உந்துலால் சமூகத்திற்கு செல்ஃபிக்கள் மீதான ஆர்வத்தை வழக்கத்துக்கு விரோதமான முறையில் கலை, விளம்பரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான குறிப்புகளுடன் இணைத்திருக்கிறேன்'' என இந்த முயற்சி பற்றி மெல்லியா சொல்கிறார்.

மெல்லியாவின் முயற்சி அட போட வைக்கிறதா? அதில் ஒன்றும் ஆச்சயமில்லை, ஏனெனில் மனிதர் ஒன்றும் சாதாரண புகைப்பட கலைஞர் இல்லை. புகைப்படக்கலையை ஒரு கலைப்படைப்பாக உணரச்செய்யும் திறமைக்காகவும், அதைவிட முக்கியமாக புகைப்படக்கலையை அணுகும் வித்ததில் சமூக பிரச்னைகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவராகவும் அவர் அறியப்படுகிறார்.

ஏற்கனவே அவர் தனது புகைப்பட வரிசை மூலம் அமெரிக்க நுகர்வோர் கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். தெற்கு சூடான் தொடர்பான அவரது புகைப்பட வரிசை உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் அவல நிலையை தனிப்பட்ட மாடல்களின் பார்வையில் வெளிப்படுத்தியது. இப்போது இன்ஸ்டாகிராம் யுகத்தில் செல்ஃபி கலாசாரம் பற்றியும் நம்மை நாம் வெளிப்படுத்தும் விதம் பற்றியும் யோசிக்க வைத்திருக்கிறார்.

மைக் மெல்லியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம்;https://instagram.com/mikemellia/

மெல்லியா இணையதளம் : http://www.mikemellia.com/

சைபர்சிம்மன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close