Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீதிக்கு வந்த வானொலி நிலையம்!

நாட்டின் பழம்பெருமை வாய்ந்த ஊடகமாக இன்றும் விளங்கிக் கொண்டிருப்பது வானொலி தான். அந்த அடிப்படையில் சிறந்த ஊடகமாக விளங்கி வரும் வானொலிகள் அவ்வப்போது சில திடீர் முடிவுகளை எடுக்க நேரிடுகிறது.

இந்நிலையில் வங்கக் கடலோரம் அலை வீசும் கடலிடையே தன் ஒலி அலைகளை கதிர்களாக வீசும் காரைக்கால் பண்பலை (எப்.எம்) 1௦௦.௦3க்கு இருபத்து ஒன்றாம் ஆண்டு பிறந்த நாள் விழாவாம். ஆமாம், காரை பண்பலை ஆரம்பிக்கப்பட்டு 21ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர்.  ஏற்கனவே தொலைகாட்சி நாடகத்தில் ஆயிரமாவது எபிசொட் வரும்போது முழுவதும் நேரலையாக போனது. அதை போலவே காரைக்கால் பண்பலையும் தன் ஒலிபரப்பில் ஒரு புதுமுறையை புகுத்த நினைத்தது. காலை முதல் இரவு வரை வானொலி நிலையம் மூடுவது வரை வெவ்வேறு ஊர்களில் இருந்து நேரலையாக இருந்தால் என்ன? என்பது தான் இவர்களின் கேள்வி. அதற்கு உயிர் வடிவம் கொடுத்து செயல்படுத்தி இருகின்றனர் பண்பலை ஊழியர்கள்.

21ஆம் ஆண்டு என்பதால் 21 ஊர்களுக்கு நேரடியாக சென்று நேரடி ஒலிபரப்பு செய்தனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய தொலிழ்நுட்பம் மிகவும் எளிமையானது. போன் கால் அடிக்கப்பட்டவுடன், வானொலி நிலையத்திலிருந்து அடித்த போன் காலை ஊர் ஊராக சென்று செய்தி சேகரித்து அதோடு வாழ்த்துக்களையும் பெற்றனர் வானொலி தொகுப்பாளர்கள். சாதாரண போன் கால் முறை தான் இந்த நேரலை ஒலிபரப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு ஊரின் பழக்க வழகங்களை உலகறியச் செய்தது.

வானொலி நிலையத்தில் அவ்வப்போது பேசும் வாசகர்கள் சிலர், இந்நிகழ்வில் அறிமுகம் ஆனார்கள். திருவாரூர் ரயில் நிலையம் அருகே நேரலை ஒலிபரப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை முதல் எந்த ஊர் எந்த நேரம் என அறிவிப்பு வந்த வண்ணம் இருந்ததால் கொடிகால்பாளையம் எனும் சிற்றூரைச் சார்ந்த மாற்றுதிறனாளி ஜான் ஹாஜா நஜுமுதீன் முன்னமே வந்திருந்தார். அவரிடம் அவர் வந்திருந்த ஆட்டோ இருக்கும் இடத்திருக்கே வந்து பேட்டி எடுத்துக்கொண்டனர். திருவாரூரில் நேரலை ஒலிபரப்பு முடிக்கும் தருவாயில் வண்டாம்பாளையம் எனும் கிராமத்தைச் சார்ந்த பள்ளி மாணவி ஓடி வந்து தன் இருப்பை பதிவு செய்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

நேரலை முடிந்த பின், அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கேட்டபோது, இந்நிகழ்வு வெற்றியடைய வேண்டும் என்பதற்காக எங்கள் ஊழியர்கள் இன்று முழுதும் உண்ணாமல் கூட வேலை பார்த்து கொண்டிருகின்றனர். இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என கூறி விட்டு சிட்டாக பறக்கிறார் அடுத்து நேரலை நிகழ்ச்சி செய்ய வேண்டிய ஊருக்கு.

எப்படி இருந்தாலும், மக்களிடம் எவ்வளவோ மாற்றங்கள் வந்தாலும் இன்றும் வானொலி ஒரு குறிப்பிடதக்க இடத்தை பிடித்திருப்பதற்கு இதுபோன்ற மாறுபட்ட நேரலைகளும் காரணம். உணவில்லாமல் உழைத்த நெஞ்சங்களுக்கு ஒரு சலாம் போடுவோம்.

செய்தி, படங்கள்: த.க.தமிழ் பாரதன்
(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close