Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோடைக்கேற்ற ஆர்கானிக் சேலை: கோஆப்டெக்ஸ் அறிமுகம்!

கோவை: கோடை காலத்தில் அணிவதற்கு ஏற்ற வகையிலான ஆர்கானிக் வகை சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது கோஆப்டெக்ஸ்.

கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதே எல்லோரும் பருத்தி ஆடைகளை விரும்பி அணிய துவங்கி விட்டனர். இந்த சூழலில் வழக்கமான பருத்தி ஆடைகளை விடவும் கோடை வெயிலுக்கு இன்னும் ஏற்ற வகையிலான ஆர்கானிக் சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு நிறுவனமான கோஆப்டெக்ஸ்.

பூச்சிக்கொல்லி மருந்தால் மாசடைந்த விளைநிலங்களின் நச்சுத்தன்மையை நீக்கி, அதன் பிறகு அந்த நிலத்தில் இயற்கை முறையில் பருத்தி விளைவிக்கப்பட்டு, பஞ்சு தயாரித்து, அதன் மூலம் கிடைக்கும் நூலில் இருந்து இந்த ஆர்கானிக் ரக சேலைகள் தயார் செய்யப்படுகின்றன. கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வதம்பச்சேரி கூட்டுறவு சங்கத்தினைச் சேர்ந்த நெசவாளர்கள் 22 பேர் இந்த ஆர்கானிக் ரக சேலைகளை தயாரித்து வருகின்றனர்.

சேலைகளுக்கு சாயமிடுவதிலும் துளியும் ரசாயனம் கலந்த சாயங்களுக்கு இடமளிப்பதில்லை. அதற்கு மாற்றாக சங்குப்பூ, கரிசலாங்கண்ணி கீரை, கருங்காலி மரப்பட்டை, செவ்வாழைப் பூ தோல் போன்ற இயற்கை சார்ந்த பொருட்களில் இருந்து சாயமெடுக்கப்பட்டு, அதுவே பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த வகையிலான சேலைகளை கோஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறும் அதிகாரிகள், வழக்கமான பருத்தி ஆடைகளை காட்டிலும் இந்த சேலைகள் கோடைக்கேற்ற வகையில் மிக வசதியாக இருக்கும் என தெரிவித்தனர். 3200 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்ட இந்த சேலைகளுக்கு வாடிக்கையாளர்களிடமும் நல்ல வரவேற்புள்ளதாகவும், தனியார் விற்பனையகங்களுடனான போட்டியை சமாளிக்க இது பெரிதும் பயன்படும் என்றும் கோஆப்டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வாடிக்கையாளர் மற்றும் நெசவாளர்களுக்கிடையே பிணைப்பினை ஏற்படுத்தும் வகையில், இந்த சேலைகளில் அந்த சேலையை நெய்த நெசவாளரின் புகைப்படம், பெயர் அடங்கிய அட்டை இணைக்கப்பட்டுள்ளது. இந்த சேலையை வாங்கியதற்கு நன்றி என நெசவாளர்கள் தெரிவிப்பது போன்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களும், சேலைகளுக்கு சாயமிட பயன்படுத்தப்பட்ட இயற்கை தாவரங்கள் அடங்கிய விவரங்களும் அந்த அட்டையில் இடம்பெற்றுள்ளது.

ச.ஜெ.ரவி,

படங்கள்: தி.விஜய்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close