Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தவளை பர்கர் சாப்பிட வருகிறீர்களா?!

‘தவளை பர்கர் - 100 யென்!’ என்ற போர்டைப் பார்த்து, ‘உவ்வே...’ என்று விலகுபவர்களை, ‘அட, வந்து சாப்பிட்டுப் பாருங்க பாஸ்!’ என்று கூலாக அழைக்கிறார்கள், ஜப்பானில் உள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவில் உள்ள கஃபேயில். சவுத் டோக்கியோவில் உள்ள இந்த அம்யூஸ்மென்ட் பார்க்தான், இப்போது டாக் ஆஃப் தி ஜப்பான்.



எல்லாம் தவளை பர்கர் உபயம்தான்! முழு தவளையை டீஃப் ஃப்ரை செய்து (அட, இதற்கு விளக்கம் வேறா என்று முகம் சுளிக்காமல், மேலே படியுங்கள்!), அதன் மேல் லெட்யூஸ் இலைகள், கறுப்பு சார்கோல் நிற பன்னை வைத்து அட்டகாசமாக அவர்கள் தர, அதை அப்படியே பைட் செய்ய நிற்கிறது பெரிய க்யூ. இந்த பர்கரின் விலை 100 யென். அதாவது, ஜப்பானில் ஒரு மீல்ஸின் விலை. இதனுடன் ஒரு டிரிங்ஸும் சேர்த்து தருகிறார்கள். பர்கரை சாப்பிட்டுவிட்டு, டிரிங்ஸ் ‘சிப்பி’விட்டு, ஹாயாக நடக்கலாம் தவ்வித் தவ்வி!

கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கும் வரலாம், தவளை பர்கர். பிடித்துச் சாப்பிட... ஸாரி... கடித்துச் சாப்பிட ஆர் யு ரெடி!

 -அதிதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ