Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு சைடிஷ் சரக்கான கதை!

‘என்ன இன்னைக்கு தண்ணி அடிக்காமலே உளர்ற..?!’ என்று கேலிக்குச் சொல்வதுண்டு. ஆனால் நிஜமாகவே இங்கிலாந்தைச் சேர்ந்த நிக் ஹெஸ், என்பவர் தினம் தினம் போதையில் இருக்கிறார் ‘தண்ணி அடிக்காமலேயே’. ‘ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம்’என்ற பாதிப்புள்ள இவருக்கு, இவரின் வயிறு கார்போஹைட்ரேட் உணவுகளை ஆல்கஹாலாக மாற்றிவிடுகிறது அநியாயமாக.

‘‘திடீரென எனக்கு வயிறு வலிக்கும். தாங்க முடியாத தலைவலி ஏற்படும். தினமும் வாந்தி எடுப்பேன். என்ன பிரச்னை என்றே புரியாமல் நான் குழம்பிக்கொண்டிருக்க, தடுமாறி நடப்பது, குளறிப் பேசுவது, சுயநினைவு இழப்பது போன்ற என் நடவடிக்கைகள், நான் குடிகாரன் என்று என் மனைவியையும், நண்பர்களையும் நம்ப வைத்ததுதான் கொடுமை.’’- சலிப்பும் சிரிப்புமாகச் சொல்கிறார், நிக். நிக்கின் மனைவி கரேன் டா, அவரை மெகா குடிகாரராக நினைத்து சண்டையிட்டதெல்லாம், டிராஜிக் காமெடி எபிஸோட்.

‘‘இருவரும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருப்போம். கொஞ்சம் கொஞ்சமாக அவர் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும். சில மணி நேரங்களில், தள்ளாடி நடப்பது, பிதற்றுவது என போதை தலைக்கேறியவராக இருப்பார். நான்,‘குடித்தீர்களா?’ என்று சண்டையிட்டால், இல்லவே இல்லை என்பார். அவர் ஏதேனும் ஆல்கஹால் பாட்டிலை ஒளித்து வைத்திருக்கிறாரா என்று வீடு முழுக்கத் தேடுவேன். கிடைக்காது. ஒரு நாள், சில நாட்கள் என்றால் பரவாயில்லை... தினமும் இதே காட்சிதான் எங்கள் வீட்டில் என்பதால், வெறுத்துப் போனேன். ஆனால், ஒருநாள் கூட அவர் குடித்ததை உறுதிப்படுத்த முடியாத என் தோல்விதான், ‘குடிக்கவில்லை’ என்ற அவர் சொல்லை நம்ப வைத்தது.’’ எனும் கரேன், நிக்கை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

மூன்று எண்டோஸ்கோபிகள், மூன்று கோலனோஸ்கோப்ஸ் உள்ளிட்ட பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்டும் கண்டுபிடிக்க முடியாத நிக்கின் பிரச்னை, கார்போஹைரேட் உணவு சாப்பிட்ட பின் அவர் வயிற்றில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையின் போது தெரிய வந்தது. அந்த உணவு, கிட்டத்தட்ட ஏழு ஷாட்ஸ் விஸ்கி சாப்பிட்ட அளவுக்கு அவர் ரத்தத்தில் ஆல்கலால் லெவலை அதிகரித்திருந்தது.

அந்த நூலைப் பிடித்துச் சென்ற மேற்பரிசோதனையில், அவர் ‘ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம்’ பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதனால் அவர் வயிற்றில் உற்பத்தியாகும் அளவுக்கு அதிகமான ஈஸ்ட், அவர் சாப்பிடும் கார்போஹைட்ரேட் உணவுகளை ஆல்கஹாலாக மாற்றிவிடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது நிக்கிற்கு ஆன்டி ஃபங்கல் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருப்பதுடன், கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘‘இருந்தாலும், கவனிக்காமல் எதையாவது சாப்பிட்டுவிட்டு, நான் குடிக்காமலே குடிகாரனாகும் சம்பவங்கள் மாதத்திற்கு இரண்டாவது நடந்துவிடுகின்றன. ஆனால், இப்போதெல்லாம் மனைவி ஊதச் சொல்லி விசாரணை நடத்துவதில்லை என்பது பெரிய நிம்மதி!’’

பெருமூச்சு விட்டபடி சொல்லி சிரிக்கிறார் நிக்!

- இனியா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close