Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!'

காவல்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் என்றாலே, இப்போதைக்கு அலர்ஜியாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக உதவி கமிஷனர், போக்குவரத்துப்பிரிவு துணை கமிஷனர் ஆடியோ காவல்துறை வட்டாரத்தையே கலங்கடித்து விட்டது.

இப்போது வாட்ஸ் அப்பில் வலம் வரும் லேட்டஸ்ட் ஆடியோ இது!
 

முடி கொட்டும் பிரச்னைக்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் ஆயிலை தேய்த்து எல்லா முடியையும் பறி கொடுத்த வாடிக்கையாளரும், சம்பந்தப்பட்ட ஆயில் கம்பெனியின் விற்பனை பிரதிநிதியும் பேசுவதாக இடம்பெற்றுள்ள அந்த உரையாடல் இங்கே...

கம்பெனியின் பெண் பிரதிநிதி:  எத்தனை பாட்டில் யூஸ் பண்ணீங்க?

ஆண் வாடிக்கையாளர்: நான் மூணு, நாலு பாட்டில் வாங்கி இருக்கிறேன்.

பெ: ஒரே பாட்டில் வாங்கி இருக்கிங்கன்னு எங்கிட்ட கணக்கு இருக்கு
ஆ: இல்ல.... நாலு பாட்டில் வாங்கி இருக்கேன்.
பெ: ஆனால் ஒரு பாட்டில் மட்டும் தான் காட்டுது
ஆ: அப்ப.. உங்க கம்ப்யூட்டர்ல ஏதாவது பிரச்னை இருக்கு.
முதல் பாட்டில் வாங்கும் போது கொஞ்சோடு மூடி போயிருந்துச்சும்மா.. தேய்க்க எல்லா முடியும் போயிடுச்சி.
பெ:  ஒரு நிமிஷம் லைனில் இருக்கீங்களா

 ஆ: ................

பெ: ஹலோ,
ஆ: ஹலோ
பெ: சொல்லுங்க சார்... எப்படி யூஸ் பண்ணீங்கன்னு தெரிஞ்சிகிடலாமா நீங்க...

ஆ: அவங்க எப்படி யூஸ் பண்ண சொன்னாங்களோ அப்படித்தான் யூஸ் பண்ணினேன். எனக்கு முதல்ல முதல் கொஞ்சம் முடி போயிருந்துச்சு.....எல்லோரும் சொன்னாங்க. டிவி விளம்பரத்த பார்த்து வாங்கி தேய்ச்சேன். முதல் பாட்டில் தேய்க்கும் போது கொஞ்சம் முடி போச்சு. இரண்டாவது, மூணாவது பாட்டில் தேய்க்கும் போது முடி போயிட்டு. இப்போ மொட்டை மண்டையா இருக்கிறேன். நான் வேண்ணா  போட்டோ எடுத்து அனுப்பட்டுமா?

பெ: சார் அந்த மாதிரி ப்ராபளம் இருக்காது. புரோட்டீன் ப்ராபளம் இந்தா அப்படி இருந்துக்கும். வேர்ல போயி நல்லா வளரும். கண்டிப்பாக வளரும் சார்.

ஆ: தேய்க்க தேய்க்க எல்லாம் போய்விட்டது. மழை பெஞ்சா வளருமா...... இப்ப வெயில் காலமன்னா வரலையோ......கண்டிப்பா வளரும்ன்னு எதைவச்சு சொல்றீங்க.....ஒரு பாட்டில் தேய்ச்ச போது சொன்னதற்கு அடுத்தப்பாட்டில் தேய்க்க சொன்னீங்க...

பெ:  பொடுகு இருந்தால் முடி கொட்டும். தொடர்ந்து தேய்ங்க முடி கொட்டுவது ஸ்டாப் ஆகிடும். இனிமே நல்லா வளரும்.

ஆ: இந்த ஆயில் எங்கிருந்து வருது

&&&&&&&&&&&&&&&&&& (இடத்தை சொல்கிறார் பெண் விற்பனை பிரதிநிதி)

பெ: ஒரு நிமிஷம் இருங்க சார்

  அமைதி...

பெ: ஹலோ

ஆ: சொல்லுங்கம்மா. அந்த இடத்தில இந்த பிராடைட்ட சேல் பண்றீங்களா. இந்த ஆயில் தயாரிக்கும் இடத்தில எல்லாரும் சொட்ட மண்டையா இருக்காங்கன்னு என் பிரண்ட்ஸ் சொல்றாங்க. பிள்ளைகள் எல்லாம் கிண்டல் பண்றாங்க.

பெ: எல்லோரும் நல்ல ரிசல்ட் கொடுக்கிறாங்க. ராங் ரிசல்ட் கொடுக்கல்ல

ஆ: ஏங்க.......மூணு பாட்டில் வேஸ்ட் பண்ணிட்டேனேன்.

பெ: கம்பளைன்ட் பண்ணுறன்.

ஆ: எனக்கு என்ன  கம்பளைன்ட் பண்ணுறீங்க....நாலாயிரம் ரூபாய் வாங்கிட்டீங்க.

பெ: கண்டிப்பாக வளரும்

ஆ: போன முடிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? அடுத்த பாட்டில் வாங்க சொல்றீங்க...

பெ: கண்டிப்பாக வளரும்

ஆ: நீங்க எதிலோ (டிவியில்) சொல்ற மாதிரி பேசறீங்க. பிராக்டிக்கலா பேசுங்க...

பெ: ஆயில் தேய்ச்சிட்டு வெளியில போகும் போது பொலியூசன் இருந்தா கூட இந்த பிரச்னை வரலாம்.

ஆ: ஆயில் தேய்ச்சிட்டு வெளியில் எங்கும் போகக்கூடாதா?

பெ: தலையில் கர்சீப் கட்டிட்டு  போங்க.  கண்டிப்பா வளரும்...பீல் பண்ணாதீங்க.

ஆ: எனக்கு முதல்ல கொஞ்சம்தான் முடி போயி இருந்துச்சி.

பெ: கண்டிப்பாக எங்க தரப்பில கம்பளைன்ட் பண்ணுங்க.

ஆ: எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் கொடுத்த நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு விக்காவது வாங்கி கொடுங்க. பிள்ளைகள் பார்த்து கிண்டல் பண்ற மாதிரி இருக்கு

பெ: கம்பளைன்ட் பண்ணுறேன்.
ஆ: கம்பளைன்ட் எடுத்து இருக்கீங்க. அந்த  நம்பர் கொடுங்க...
பெ: என்கொய்ரி பண்ணுவாங்க. உங்களுக்கு எந்தப் ப்ராபளமும் வராது.

ஆ: உங்களுக்கு ப்ராபளம் இல்ல... எனக்குத் தான். என்கொய்ரி பண்ணுவீங்களா. நாலாயிரம் ரூபாய் திரும்ப கொடுப்பீங்களா. அந்த ஆறுதலில் கொஞ்சம் முடி வளர்ந்துரும். நாலு பாட்டில் தேய்க்க தேய்க்க முடி எல்லாம் போயிடுச்சி. முடி போனதற்கு என்னத்த சொல்லுறது.

பெ: மீண்டும் யூஸ் பண்ணுங்க. கண்டிப்பா வளரும்.

ஆ: திரும்பவும் அந்த ஆயிலை யூஸ் பண்ணச் சொல்றீங்களா......

 

இப்படி 4 நிமிடங்கள், 53 நொடி உடைய அந்த ஆடியோ முடிகிறது. இதை கேட்கும் போது சிரிப்பும் வருகிறது.

இது போன்று வாட்ஸ் அப்பில் தினமும் ஏராளமான ஆடியோக்கள் வந்தாலும், இந்த ஆடியோவுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் செம வரவேற்பு...!


-எஸ். மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ