Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகள் உரிமையும் பொம்மலாட்டமும்!

சென்னை:UNICEF உடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழக ஊடகத் துறையான "மீடியா சைன்சஸ்”,   "குழந்தை உரிமை" பற்றிய கருத்தரங்கத்தை நடத்தியது. நிகழ்ச்சியில் குழந்தை உரிமைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டது.

குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், பெண் கல்வி, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளி போன்ற பல தலைப்புகளில் விவாதிக்கப்பட்ட இந்த நிகழ்வில், மு.கலைவாணன் குழுவினரின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

'குழந்தைகள் உரிமை' தொடர்பான கருத்துக்களை நகைச்சுவை கலந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரிதும் கவனத்தைப் பெற்றது.

சிறு சிறு மாதிரி பொம்மைகளை கைகளால் இயக்கியும், தங்கள் குரல்களால் அதற்கு உயிரூட்டம் தரும் பொம்மலாட்டம் என்ற பண்டைய கால அரிய கலை வடிவத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வரும் கலைவாணன் வணிக நோக்கின்றி விழிப்புணர்வு நோக்கத்துடன் செய்து வருகிறார். பல கதாபாத்திரங் களுக்கும் அவர் ஒருவரே குரல் மாற்றி பேசியது பாராட்டுக்குரியதாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு பின் பேசிய கலைவாணன், “'Folk media" என்று அழைக்கப்படும் இந்த மக்கள் ஊடகக் கலை பொதுவாக பக்தி அல்லது புராண கதைகள் கூறவே பயன்பட்டு வரும் நிலையில், மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருவியாக அதை நடத்திவருவதற்காக பெருமைப்படுவதாக நெகிழ்ந்தார்.

பொம்மலாட்டத்தை போல நேரடியாக மக்களுடன் அணுகும் மக்கள் ஊடகங்ககள் (Traditional Folk Media) பெருக வேண்டும் என்று கூறிய அவர், இதுபோன்ற கலை வடிவங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் ஒரு காலத்தில் மக்களின் பொழுதுபோக்கில் முக்கிய அங்கமாக வகித்த பொம்மலாட்ட கலை, மின்னணு ஊடக வளர்ச்சியினால் ( electronic media) தேய ஆரம்பித்திருக்கிறது“ என கவலை தெரிவித்தார்.

பொம்மலாட்ட கலையை பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பதற்கான முன்மொழிவை மு.கலைவாணன், அரசிடம் வைத்துள்ளார்.

ஊடக துறை பேராசிரியர் டாக்டர் அருள் செல்வன் பேசுகையில், "இதுபோன்ற மரபு சார்ந்த கலை வடிவங்களின் முக்கியத்துவத்தை ஊடக மாணவர்கள் உணர்ந்து, மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்" என்றார்.

இக்கலையை 'E-content' என்று அழைக்கப்படும் மின்னணு வாயிலாக தகவல்களை வெளிப்படுத்துதல் முறையிலோ 'E -learning' முறையிலோ சமூக விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறினார்.
மாணவர்கள் நல்லதொரு அனுபவத்தை பொம்மலாட்டம் மூலம் பெற்றதாகக் கூறி கலைந்துசென்றனர்.

-சி. தினேஷ்குமார்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ