Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாங்க உங்க முகத்தையும் மாத்திக்கலாம்...

ஸ்திரேலியாவைச் சேர்ந்த லியானே மோஸ்லே (Lianne Moseley), மணப்பெண் அலங்காரம் செய்யும் நிபுணராக பணியாற்றி வருகிறார். சாதாரண மேக்கப் கலைஞர்தானே என்று எடைபோட்டுவிடாதீர்கள். மனிதர், தன் மேக்கப் திறமையால், கார்ட்டூன் கதாபாத்திரங்களே உயிரோடு வந்துவிட்டது போல முகங்களை மாற்றி எல்லோரையும் பிரமிக்கவைக்கிறார்.

25 வயதாகும் இருவருக்கு, சிறுவயதில் காமிக்ஸ் கதைகள் மீது ஆர்வம் இருந்ததாம். பள்ளிவிட்டு வந்ததும் ஓவியங்கள் வரைவாராம். வளர்ந்ததும் மேக்கப் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து, பிறகு தோழிகளுக்கு மேக்கப் போட்டிருக்கிறார்.

நாளடைவில், 'ஃபேஸ் பெயின்டிங்கும்' கற்றுக்கொண்டு, இப்போது மேக்கப் மூலம் கதாபாத்திரங்களாக மாற்றும் வித்தையால், ஆஸ்திரேலியாவின் மிகப் பிரபலமாகிவிட்டார்.

ஒருவரை காமிக்ஸ் கதாபாத்திரமாக மாற்ற இரண்டு மணி நேரம் ஆகிறதாம். ''ஒரு நாள், எனக்கு நானே Archer கதாப்பாத்திரம்போல் மேக்கப் போட்டு, படம் எடுத்து அப்பாவுக்கு ஃபேஸ்புக்கில் அனுப்பினேன். அதைப் பார்த்ததும்,  நீ மேக்கப் போட்ட நண்பனின் பெயர் என்ன? என்று கேட்டார்.

அது நான்தான் என்று சிரித்தபடியே சொன்னதும், ஆ... என்று ஆச்சர்யப்பட்டுப்போனாராம் அவரது தந்தை. . அச்சு அசல் அதேபோல இருக்கிறாய் என்று பாராட்டினாராம்."

நண்பர்களைப் பல்வேறு காட்டூன் கதாபாத்திரங்களாக மாற்றி, ஃபேஸ்புக், இன்ஸ்டக்கிராமில் (Instagram) போட்டோக்களை அப்லோட் செய்து, பாராட்டு மழையில் நனைந்துவருகிறார் மோஸ்லே.

- என்.மல்லிகார்ஜுனா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close