Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காகிதச் சிற்பங்களின் தேவதை!

சிற்பத்தை கல்லுல பார்த்திருப்பீங்க......... மரத்தில பார்த்திருப்பீங்க.......... களிமண்ணிலயும் பார்த்திருப் பீங்க...காகிதத்துல பார்த்திருப்பீங்களா?

ரஷ்யாவில் உள்ள சுர்குட் கலை அருங்காட்சியகத்தில் (Surgut Art Museum)  பார்க்கலாம். சிற்பி அஸ்யா கொசினா (Asya Kozina) வின் கைவண்ணத்தில் உருவான இவை மிகவும் எடை குறைந்த சாதாரண வெள்ளைக் காகிதத்தில், தன் கற்பனையால் எல்லோரும் வியக்கும்படி உருவாக்கப்பபட்டுள்ளது.

குழந்தைப் பருவத்திலிருந்தே காகித சிற்பங்களின் மேல் ஆர்வம் கொண்டிருந்த கொசினா, பல்கலைக்கழகப் படிப்பின்போது அந்த ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டார். காகித பொம்மைகள், புனைதல், வெட்டுதல் மற்றும் மடித்தல் உட்பட, பல வழிகளில் செய்யப்படுகின்றன. ஆனால், அஸ்யாவின் காகிதச் சிற்பங்களோ பல கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

காகிதச் சிற்பம் செய்ய, அது தொடர்பான தகவல்களைச் சேகரித்து, வரைபடம் தயாரித்து முடிக்க ஒரு மாதம் வரை ஆகும் என்கிற அஸ்யா, பல நாடுகளின் திருமண உடைகளை காகிதச் சிற்பமாகச் செய்து அசத்தி உள்ளார். சுர்குட்டில் நடைபெறும் இவரது கண்காட்சியில், பாரம்பரிய 'சுலு' (zulu) முறை திருமண உடைகள் இடம்பெற்று உள்ளன. இதற்கான மூலப் பொருட்களைத் தேடும்போது, பல நாடுகளின் பாரம்பரிய உடைகளைக் கண்டு மிரண்டு போனாராம் அஸ்ய கொசினா.

சிறப்பு வாய்ந்த பல கலாசார உடைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதற்கு, பல திருமண நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப்பட்டிருந்ததும் காரணம் என்கிறார்.

1984-ல் உக்ரேனில் பிறந்த அஸ்ய கொசினா, சிறு வயது முதலே காகிதச் சிற்பத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டு, கடுமையான உழைப்பின் மூலம் தேசிய அளவிலும், உலக அளவிலும் கண்காட்சிகள் நடத்தியுள் ளார். இவரின் முதற் காகிதச் சிற்பக் கண்காட்சி, 2007-ல் 'வெண்மையின் மகிழ்ச்சி' என்ற தலைப்பில் செர்கசி அருங்காட்சியகத்தில் நடந்தது. 2009-ல், 'கிவ்' -ல் உள்ள பொம்மைகள் அருங்காட்சியகத்தில், 'பொம்மை உலகம்', 'கிறிஸ்துமஸ் மரத்தின் அலங்கார வளர்ச்சி' என்ற தலைப்பில் சிற்பக் காட்சிகள் வைத்து, அனைவரையும் வியக்கவைத்தது இவரது சாதனை எனலாம்.

இவரின் சிற்பத்தில், நகை வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்கள் எப்போதும் வரவேற்கப்படுவதாகக் கூறுகிறார். உக்ரேன் மக்கள், அஸ்ய கொசினாவை 'காகிதங்களின் தேவதை' என்று இவரை அழைக்கிறார்கள்.

- செந்தமிழ்,
புதுச்சேரி
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ