Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மை அப்பா... மை ஹீரோ ; நெகிழ்ச்சி மகள்கள்

ரோல் மாடலாகக் கொண்டவருடனே ஜூனியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அந்த ரோல் மாடல் அப்பாவாக இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அப்பா பைலட்டாக இருந்தால் எப்படி இருக்கும்?

ஆம்... பைலட் அப்பாவைப் பார்த்து பைலட் கனவு கண்டு பைலட் ஆகி, தற்போது கேட்பன் அந்தஸ்திற்கு உயர்ந்த தன் அப்பாக்களுடன் இணைந்து கோ பைலட் ஆக பயணித்த மகள்களின் சுவாரஸ்யத் தொகுப்பு இது...

அமெரிக்க ஏர்லைன்ஸின் கேப்டன் ஸ்கூட் பியர்னி, சமீபத்தில் சிகாகோவிலிருந்து டால்ஸுக்கு சென்ற தனது பயணத்தின் போது, கோ பைலட்டாக வந்த நபரை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர், பியர்னியின் செல்ல மகள் ஜேன் பியர்னி!

‘‘என்னுடைய எட்டாவது வயதில் ஆரம்பித்தது, என் அப்பாவைப் போல நானும் பைலட் ஆக வேண்டும் என்ற கனவு. அது 28 வது வயதில் நனவாகியிருக்கிறது. அதுவும் அப்பாவுடன் சென்ற பயணத்தில், அப்பாவே பாராட்டும் அளவிற்கு லேண்டிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிரம்பி வழிந்தது. லேண்டிங் ஆனதும் நான் அப்பாவைப் பார்க்க, அவர் பெருமையுடன் என்னை ரசித்துக்கொண்டிருந்தார்.

வாழ்வில் மறக்க முடியாத அழகான தருணம் அது. எங்களோடு என் அம்மாவும் ஒரு பயணியாகப் பயணித்தார். என் கனவை நனவாக்கியதில் அவருக்குப் பெரும் பங்கு!’’ என்று ஜேன் சொல்ல, ‘‘என் செல்ல மகளின் சீனியரா கப் பணியாற்றியது, வார்த்தைகளில் சொல்ல முடியாத சந்தோஷம்!’’ என்கிறார் ஸ்கூட்!

30 வருடங்கள் பைலட்டாகப் பணியாற்றும் கேப்டன் பீட்டர் எல்லாய்டுக்கு, தன் பைலட் மகளுடனான சிறப் புப் பயணம், பிப்ரவரி மாதம் நடந்திருக்கிறது. மகள் லாரா எல்லாய்ட் சொல்லும் போது, ‘‘பிர்மிங் ஹாமிலி ருந்து (Birmingham) டெனெரரிபி(Tenerife) செல்லும் பயணத்தில் என் அப்பாவுடன் பயணம் என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் அதிர்ந்துவிட்டேன்.

கடந்த ஆறு வருடங்களாக ஃபிளைட்டில் ஃபர்ஸ்ட் ஆபிசராக இருக்கிறேன். அப்பா ரிட்டையர்டு ஆவதற்கு முன்னதாக அவருடன் பயணித்திட வேண்டும் என்று தவிப்பு இருந்தது.

திடீரென்று இந்த வாய்ப்புக் கிடைக்க, கனவு நனவான சந்தோஷத்தில் முதலில் பதற்றமாகி விட்டது. பின் னர் அப்பா என்னை சகஜமாக்கினார். இன்னொரு முறை இந்த வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று ஆசை யாக உள்ளது!’’ - கண்கள் சுருக்கிச் சிரிக்கிறார், லாரா.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் கூட இதே போன்றதொரு சம்பவம் நடந் திருக்கிறது. கேட், தன் அப்பா டேவிட்டுடன் சம்மர் லீவில் ஃபிளைட்டில் சென்றிருக்கிறார். ஆனால் கேப்டன் அப்பாவுடன் கோ பைலட் ஆக பயணிப் போம் என்று அப்போது நினைத்திருக்க மாட்டார். ‘‘அப்பா யூனிஃபார்ம் அணிந்து கிளம்பும்போது, நானும் ஒருநாள் அந்த யூனிஃபார்ம் அணிய வேண்டும் என்று ஆசைப் பட்டேன்.

12 வருடங்களாக சீனியர் ஃபர்ஸ்ட் ஆபிசராகப் பணியாற்றுகி றேன். தற்போது முதன் முதலாக கேப்டன் டேவிட், அதாவது என் அப்பாவுடன் கோ பைலட் ஆக பயணித்திருக்கிறேன். என் தங்கை ஹன்னாவும், க்ரூ மெம்பராக எங்கள் பயணத்தில் பங்கு கொண் டார். பயணத்தின்போது நான் என் தங்கையிடம் டீ கொடுக்கச் சொல்லி வம்பிழுக்க, அவள் ‘நீயே போட்டுக்கோ’ என்று வம்பி ழுத்தது சுவாரஸ்ய எபிஸோட்.

அப்பாவை எப்படி அழைப்பது என்று திணறி, ‘கேப்டன்’, ‘அப்பா’ என்று மாறி மாறி அழைத்தேன். அப்பா கூலாக அதை ரசித்துக்கொண்டே வந்தார். என் அப்பா ஆயிற்றே!’’ - பேச்சில் சந்தோஷம் நிரம்பி வழிகிறது கேட்க்கு.

- யதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ