Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘நீ நல்லா நடிக்கிறேம்மா!’ - அனுஷ்காவை பாராட்டிய இளையராஜா!

பெரிய ஸ்டார்களுக்கு இணையாக, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது ருத்ரமாதேவி. தமிழ், தெலுங்கு இரண்டிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இதில் அனுஷ்காவைத் தாண்டி இன்னொரு ஹைலைட்டான வி.ஐ.பி. - இசைஞானி இளையராஜா.

சின்ன வயதிலிருந்தே இளையராஜாவின் தீவிர விசிறியாம் அனுஷ்கா. ‘அருந்ததி’ படம் மாதிரி ‘ருத்ரமாதேவி’யும் சரித்திரப் படம் என்பதால் மட்டுமல்ல; இதற்கு இசை இளையராஜா என்பதால் டபுள் ஓகே சொன்னாராம் அனுஷ்கா. ருத்ரமாதேவி ட்ரெய்லருக்கு இசைஞானி அமைத்திருந்த ட்யூன் பார்த்து மிரண்டு விட்டாராம் அனுஷ்கா. ஷூட்டிங் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், சவுண்ட் ரெக்கார்டிங் மட்டும்தான் பாக்கி. இதற்காக நாளை லண்டன் செல்லவிருக்கிறார் இளையராஜா.

எனவே, லண்டன் செல்லவிருக்கும் இளையராஜாவைப் பார்த்து வழியனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்ட அனுஷ்கா, இதற்காகவே இன்று ஹைதராபாத்தில் இருந்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார். ‘‘நான் உங்களோட மிகப் பெரிய ஃபேன் சார்!’’ என்று ஆசையாக அவருக்கு பொக்கே கொடுத்து, '‘உங்க இசைக்காகவே படம் ஹிட் ஆகும்'’ என்று வாழ்த்திவிட்டு, போட்டோ எடுத்துக் கொண்டாராம்.

‘‘படம் பார்த்தேன். நீயும் நல்லா நடிக்கிறேம்மா! உன் நடிப்பு பிரமாதம்!’’ என்று அனுஷ்காவை பதிலுக்கு வாழ்த்தியதில், செம குஷியாய் இருக்கிறது பொண்ணு.

- தமிழ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close