Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனது பெயரை காப்புரிமை செய்ய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் முடிவு!

மகால விஞ்ஞானிகளில் சிறந்தவர்களில் ஒருவராக 73 வயதாகும் ஸ்டீபன் ஹாகிங் கருதப்படுவதோடு உலகம் முழுவதும் நன்கறிந்தவராக இருக்கிறார். ஹாகிங் தனது அறிவியல் கருத்துக்களை விளக்கி கூறும் புத்தகங்கள் பெஸ்ட் செல்லர்களாக இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன் அவரது வாழ்க்கையை மையமாக கொண்ட ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஹாகிங் தனது பெயருக்கு வர்த்தக நோக்கிலான டிரேட்மார்க் உரிமை பெற தீர்மானித்திருக்கிறார். இதன் மூலம் தனது பெயரை ஒரு பிராண்டாக மாற்றி, அது தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதை தடுக்க அவர் விரும்புவதாக பிரிட்டன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுளிங் மற்றும் கால்பந்து நட்சத்திரம் ஆகிய பிரபலங்கள் தங்கள் பெயரை காப்புரிமை பெற்றுள்ளனர். பிரபல விஞ்ஞானி பிரயன் காக்சும் தனது பெயருக்காக காப்புரிமை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்டீபன் ஹாகிங் சார்பிலும் அவரது பெயர் காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஹாகிங் பெயரை பயன்படுத்தி விற்கப்படும் டி ஷர்ட் முதல் வீடியோ கேம் வரையான பொருட்களுக்கு இது பொருந்தும். ஏற்கனவே சந்தையில் பலர் ஹாகிங் பெயரில் பல பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

பெயருக்கான டிரேட்மார்க் உரிமையை சேவை அமைப்புகளுக்காக பயன்படுத்த ஹாகிங் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

-சைபர் சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ