Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிபோதையில் காருக்குள் மயங்கிய மாணவி: காப்பாற்றிய போலீஸ்!

மெரிக்காவின் சான்-டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் பயிலும் 25 வயது மாணவி மெக் கின்னி மோர்கன். சான்-டியாகோவில் உள்ள கியார்னி மீஸா செகண்ட் லேன் பகுதியில், நடு ரோட்டில் அநாதையாக ஒரு கார் நிற்பதாகத் தகவல் வந்ததை அடுத்து செர்ஜியோ ஃப்ளோர்ஸ் என்னும் காவல்துறை அதிகாரி, ஸ்பாட்டுக்கு விரைந்தார்.

காரின் உள்ளே மோர்கன், டிரைவர் சீட்டில் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்தார். கார், நடுரோட்டில் நிற்பதும் செல்வதுமாக இருந்ததைக் கண்டு பதறிய செர்ஜியோ, தடாலென ஆக்ஷனில் இறங்கினார். ஓடிக் கொண்டிருந்த காரின் ஜன்னலை உடைத்து, ஹேண்ட் பிரேக்கைப் போட்டு பாதுகாப்பாக காரை நிறுத்திய பிறகும் போதை தெளியவில்லை மோர்கனுக்கு. ‘‘நான் எங்க இருக்கேன்?’’ என்று தமிழ்ப்பட ஸ்டைலில் நீண்ட நேரம் கழித்து கண் முழித்தவரை, நடு ரோட்டில் வைத்துக் கைது செய்திருக்கிறார் செர்ஜியோ.

‘‘130 கி.மீ வேகத்தில் நிற்காமல் கார்கள் பறந்து கொண்டிருந்த அந்த நெடுஞ்சாலையில், தன் உயிரைப் பணயம் வைத்து மாணவியின் உயிரைக் காப்பாற்றிய செர்ஜியோ ஃப்ளோர்ஸ், நமது காவல்துறைக்கே பெருமை சேர்த்திருக்கிறார்!’’ என்று பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் செர்ஜியோ.

‘‘நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன்!’’ என்று போதை தெளிந்ததும் சிறையில் இருந்தபடி வருந்தியிருக்கிறார் மோர்கன்.

வீடியோவுக்கு: https://www.youtube.com/watch?v=uzOmt9OKU-w

- தமிழ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close