Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்வையற்றோரும் ஓவியத்தை ரசிக்கலாம்!

பார்வையற்றோர், 'நம்மால் படிக்க முடியவில்லையே' என்று ஒரு காலத்தில் ஆதங்கப்பட்டார்கள். அவர்களுக்காக, பிரெய்ல் எழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்டது. கணினியை நம்மால் இயக்க முடியவில்லையே என்று அவர்கள் கவலைப்பட்டபோது, அதற்கும் தொழில்நுட்பம் கண்டுபிடித்தார்கள். இப்போது அவர்கள், ஓவியங்களையே ரசிக்கும் அளவுக்கு சிறப்புத் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

ஸ்பெயினின் தலைநகர் மேட்ரிட்டில் இருக்கும் மியூசியம் ஆஃப் பிராடோ (Museum of Prado), மிகவும் பிரபலமான ஆர்ட் கேலரி. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். ஓவியக் கண்காட்சியை நாம் பார்த்து ரசிப்பது போலவே, பார்வையற்றோரும் ஓவியங்களை ரசிக்க, கண்காட்சி ஒன்றைத் தொடங்கி உள்ளனர். அதற்குப் பெயர், 'Touch The Prado'.  இந்த ஓவியக் கண்காட்சியில், பிரபலமான ஓவியங்களை 3டி தொழில்நுட்பம் கொண்டு பிரிண்ட் செய்து, காட்சிப்படுத்தி உள்ளனர். பார்வையற்றோர், இந்த ஓவியங்களைத் தொட்டு பார்த்து ரசிக்கலாம்.

இந்த புதிய முறைக்கு, 'டிடு' (Didu) என்று பெயர். இந்தக் கண்காட்சி முதல்முறை என்பதால், உலகப் புகழ்பெற்ற ஆறு ஓவியங்கள் மட்டும் இடம்பெற்று உள்ளன. ஜூன் 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஓவியக் கண்காட்சியை, பார்வையற்றோர் விரும்பி ரசித்து வருகிறார்கள்.

இந்த ஓவியங்களை ரசித்த பார்வையற்றோர் ஒருவர் கூறுகையில், ''உலகப் புகழ்பெற்ற மோனோலிசா ஓவியம், கேள்விப்பட்டதோடு சரி. இந்தக் கண்காட்சி மூலம் அந்தக் குறையையும் போக்கி இருக்கிறார்கள்" என்றார். நாமும் கறுப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு, ஓவியங்களைத் தொட்டு ரசிக்க அனுமதி உண்டு.
 
-என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ