Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முட்டாள்கள் தினத்தில் காதலர்களின் வாட்ஸ் அப் விளையாட்டு!

விபரீதமாகி இருக்க வேண்டிய முட்டாள்கள் தின விளையாட்டு அது. ஆனால், நல்ல வேளையாக அதன் முடிவு எல்லோரையும் புன்னகைக்க வைக்கும் வகையில் மகிழ்ச்சியில் முடிந்திருக்கிறது.

பிரிட்டனை சேர்ந்த ஹேலே மெக்பே எனும் இளம்பெண், முட்டாள்கள் தினமான நேற்று தனது காதலனை முட்டாளாக்கி மகிழ்வதற்காக வாட்ஸ் அப்பில் ’ நான் இனியும் உன்னுடன் இருக்க விரும்பவில்லை. நான் மகிழ்ச்சியாக இல்லை” என செய்தி அனுப்பினார்.

குறும்புக்கார பெண்ணான ஹாலே, முட்டாள்கள் தினத்தன்று காதலனை கொஞ்சம் ஏமாற்றுவதற்காக இந்த செய்தியை அனுப்பிவிட்டு காத்திருந்தார். ஆனால் காதலன் ஷாக்காகி செய்தி அனுப்புவார் என எதிர்பார்த்திருந்த அவருக்குதான் அதிர்ச்சி காத்திருந்தது.

''கடவுளுக்கு நன்றி. இதை நான் முதலில் சொல்வதற்கு பதில் நீயே சொல்லிவிட்டாய்'' என்று காதலன் பதில் செய்தி அனுப்பியிருந்தார். உடனே அதிர்ந்து போனவராய், ஏன் என்று கேட்டு பதில் அனுப்பினார். காதலனும் என்ன? என்று கேட்டு பதில் அனுப்ப அவர் வெறுத்துப்போனார். காதலனை முட்டாளாக்க நினைத்து காதலே முறிந்து போய்விட்டதோ என நொந்துபோனார்.

ஆனால், நல்ல வேளையாக காதலன் டேவிட்டுக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை, காதலில் தன்னை முட்டாளாக்க முயல்வதை புரிந்து கொண்டு, அவரும் பதிலுக்கு முட்டாள்கள் தின விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்.

டேவிட் இதை தெளிவுபடுத்தியதும் நிம்மதி அடைந்த மெக்லே , முட்டாள்கள் தினத்தன்று தான் அழகாக ஏமாந்த கதையை டிவிட்டரில் சமப்பந்தப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல் ஸ்கிரீன்ஷாட்டுடன் பகிர்ந்து கொண்டார். அதைப்பார்த்து ரசித்த பலரும் தங்கள் பங்கிற்கு ரிடிவீட் செய்தனர். சிலருக்கோ இது எல்லாமே திட்டமிட்ட செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது.

இதையும் ஒரு குறும்பதிவு மூலம் இளம்பெண் மெக்லே தெளிவுபடுத்தினார். இது திட்டமிட்டதல்ல என்றும், தனது முட்டாள்கள் தின விளையாட்டை காதலன் யூகித்து முந்திக்கொண்டு தன்னை முட்டாளாக்கியதாக தெரிவித்திருந்தார்.

முட்டாள்கள் தினமான நேற்று இணையத்தில் இது போன்ற நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரபலமான நிறுவனங்களும் கூட இதை விட்டுவைக்கவில்லை.

முன்னணி தேடியந்திரமான கூகுள், தனது அமெரிக்க முகப்பு பக்கத்தில் தேடல் கட்டத்தில் எல்லாவற்றையும் பின்னோக்கி தேடும் வகையில் அமைத்து வெறுப்பேற்றி மகிழ்ந்தது. அது மட்டும் அல்லாமல் பிரபல வீடியோ கேமான பேக்மேனை, கூகுள் வரைபடத்தில் விளையாட ஏற்பாடு செய்தும் அசர வைத்தது.

ஸ்மார்ட்போன் நிறுவனமான எச்.டி.சி., சிறிய ட்ரோனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக கூறி ஏமாற்றியது.

இப்படி பல நிறுவனங்கள் அழகாக ஏமாற்றி இணையவாசிகளை முட்டாளாக்கி மகிழ முற்பட்டன. ஆனால் ஒன்று கூகுள் முட்டாள்கள் தின விளையாட்டில் மட்டும் கூடுதல் எச்சரிக்கை தேவை. ஏனெனில் இப்போது மிகப்பிரபலமாக இருக்கும் ஜிமெயில் சேவையை, கூகுள் 2004ல் முட்டாள்கள் தினத்தன்றுதான் அறிமுகம் செய்தது.

முதல் முறையாக எல்லையில்லாத இடவசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஜிமெயில் சேவையை முட்டாள்கள் தின அறிவிப்போ என பலரும் நினைத்து குழம்பியது சுவாரஸ்யமான இணைய வரலாறு.

-சைபர்சிம்மன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ