Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மறக்க முடியுமா? 9/11 - சோகத்தை பிரதிபலிக்கும் மியூசியம்!

9/11 நினைவிருக்கிறதா... எப்படி மறக்கமுடியும் உலகியே உலுக்கிய அந்த நாளை...  அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரசத்தி பெற்ற இரட்டை கோபுரங்களின் (Twin Towers) மீது செப்டம்பர் 11, 2001 அன்று தீவிரவாதிகள் நடத்திய விமானத்  தாக்குதலில்  அந்த இரட்டை கோபுரக் கட்டடங்கள் தரைமட்டம் ஆனது. இந்த கோரச் சம்பவத்தில் 3,000-த்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். இதற்கு அமெரிக்கா மட்டும் அல்ல உலக நாடுகளும் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. 

இப்போது அங்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுவிட்டாலும் அந்த துயர சம்பவம் அனைவரின் மனதிலும் அழிக்க முடியாத நினைவாகவே பதிந்துவிட்டது. மறக்கமுடியாத இச்சம்பவத்தின் நினைவாக இரட்டை கோபுரங்கள் இருந்த அதே இடத்தில் ஒரு மியூசியம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தின் தரைதளத்தின் கீழே  70 அடி ஆழத்தில் 110,000  சதுர அடியில் அமைக்கப்பட்டிருக்கிறது 9/11 மெமோரியல் மியூசியம். சரிந்த இரட்டை கோபுரங்களின் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்த தீ அணைப்பு வண்டி, எலிவேட்டர் மோட்டார், கட்டடத்தை மோதிய விமானங்களின் உதிரி பாகங்கள், ஷூக்கள், நசுங்கிய இரும்புக் கம்பிகள் என 10, 000-க்கும் மேற்பட்டப் பொருட்களை கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த 110 மாடி உலக வர்த்தக மையத்தில் முக்கியமானது Survivors' Stairs, இந்த படிகட்டுகளின் வழியாகத்தான் நூற்றுக்கணக்கானோர் உயிர் தப்பிப் பிழைத்தனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த படிகட்டுகளின் வழி மட்டுமே இருந்தது. அதனால் மியூசியத்தில் இதற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இன்னொன்று 'Last Column'. சரிந்த கட்டடத்தில் மிஞ்சிய இந்த பில்லர், உயிர் இழந்தவர்கள் மற்றும் நூற்றுக்கணக்காண புகைப்படங்களும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது, மே 2014-ல் திறக்கப்பட்ட இந்த 9/11 மெமோரியல் மியூசியத்தை, ஏராளமானோர் கண்டு கண்ணீரோடு செல்கிறார்கள்.

- என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ