Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரெய்னாவின் திருமணத்தால் சோகம்!

ந்திய கிரிக்கெட் டீமில் லீடிங் வீரர் சுரேஷ் ரெய்னா. அவரை பிடிக்காதவர் யாருமில்லை. ரெய்னா களத்தில் இறங்கினாலே அந்த மேட்ச் வெற்றிதான். அடுத்த கேப்டன்  ரெய்னா அல்லது கோலிதான் என இந்திய ரடசிகர்கள் முடிவெடுத்து விட்டனர். ரெய்னா இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் தனக்காக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். நேற்று ரெய்னா திருமணம். அவரது தோழி பிரியங்கா சௌத்ரியை கை பிடித்தார்.
 
ரெய்னாவுக்கு இந்திய மற்றும் உலக அள்வில் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் அதிகம். அவரது இந்த திருமணச் செய்தி வந்தவுடன் பல ரசிகைகளுக்கு ஹார்ட் அட்டக்கே வந்துவிட்டது. இது பற்றி ரெய்னா ரசிகைகள் சிலரிடம் கேட்டோம்...ஹரினி

"ரெய்னா அப்படி பேட்ட எடுத்து கிரவுண்டுக்கு வந்தாலே என்னை கண்ட்ரோல் பன்ன முடியாது. நா தீவிர ரெய்னா ஃபேன். அவரது ஆட்டத்தை பார்க்க பல நாள் காலேஜ்க்கு லீவு போட்டு இருக்கேன். ரெய்னா அடிக்கற ஒவ்வொரு பாலையும் அப்படி உன்னிப்பா பார்ப்பேன். இந்தியாவின் ஆட்ட நாயகன் ரெய்னாதான். தவான், ரோஹிட், விராட், ரஹானே அடுத்துதான் ரெய்னா வருவாரு. இதுக்குள்ள எனக்கு பொறுமையே போய்டும். எப்ப ரெய்னா களத்துல இறங்குவாருனு பார்த்துடேயிருப்பேன். அவரது ஸ்ட்ரோக் ஆஃப் பேட்டிங்க் எனக்கு ரொம்ப புடிக்கும். அவர் லெப்ட் ஹாண்ட் பேட்ஸ்மேன். அவ்ளோ அழகா பந்த அடிப்பாரு. தில்லான மோகனாம்பாள் படத்துல மனோரமா ஆச்சி, சிவாஜி சார் வாசிப்ப  பார்த்து, 'எதுவும் விஷேசமா வெச்சு வாசிக்கறீங்களா, உங்க நாதஸ்வரத்துலதான் இந்த பாட்டுலாம் வருமா மத்த நாதஸ்வரத்துலயும் வருமானு?' கேப்பாங்க. எனக்கும் அதே டவுட்டுதான். ரெய்னா எதுவும் விஷேசமான பேட்ட வெச்சு ஆடரார, அவர் பேட்ல அடிச்சா எப்படி எல்லாம் 4,6, பவுண்டரீனு போகுது????? அவருக்கு கல்யானம்னு கேள்விபட்டதும் அப்படியே ஷாக் ஆகிட்டேன். இவ்வளவு சின்ன வயசுல கல்யாணமா?????? பச்..... பீலிங்க்தான் பாஸ்...

என் குமுறல கேட்க மாட்டீங்களானு வந்தார் நிவேதா...

" எனக்கு ரெய்னா பேட்டிங்க விட அவரது க்யூட்னெஸ்தான் பிடிக்கும். அவர் அவ்ளோ க்யூட்ங்க. என்னால அவர் மேரேஜ ஜீரணிக்கவே முடியல. என்னை ஏமாத்திட்டீங்க ரெய்னா... என பொய் கண்ணீர் வடித்த படியே..."ரெய்னா என்ன பண்ணுனாலும் க்யூட். அவர பேட்டோட பாத்தா பரபரப்பா இருக்காரு. ஹேண்ட்சம் கய் இன் இண்டியன் டீம். அவரது சப்பீ சீக்ஸ் சான்சே இல்ல. அடுத்த ஜென்மத்துல என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க ரெய்னா. அவர் சிக்ஸ் அடிச்சுட்டு கூட்டத்த பார்த்து கை தூக்கி காட்டுவார் பாருங்க, அதுக்கு நான் அடிமை. அவர் விளையாடற ஒவ்வொரு மேட்சையும் நான் தவறாம பார்ப்பேன். வெய்ட்டிங்க் ஃபார் ஐ.பி. எல்.

 

 

'அவர பார்ப்பியா இல்ல... அவர் விளையாடறத பார்ப்பியா...?'ன்னு செல்ல கோபத்துடன் என்ட்ரி ஆனார் ரசீனா.

" இவங்க சொல்றது ஒரு பக்கம் இருந்தாலும் அவரோட இதயம் யாருக்கும் வராதுங்க. அவருக்கு உதவும் உள்ளம். யார் விளையாடினாலும் அதற்கு சப்போர்ட் பண்ணுவார். அவருக்கு ஈகோ என்பதே கிடையாது. தன்னைவிட குறைந்த ப்ளேயராக இருந்தாலும் உளமாற பாராட்டுவார். சக ஆட்டகாரர்களை எப்பொழுதும் என்கரேஜ் பண்ணுவார்.  இந்த உலக கோப்பைல பேட்டிங்க் ஆர்டர் மாற்றினாங்க. அவர் இரண்டாவதாகதான் வருவார். தான் ஒரு லீடிங் பேட்ஸ்மேனாக இருந்தும் தனக்கு முன் ஆடுபவருக்கு கைதட்டி அனுப்புவார் . யார் விக்கெட் எடுத்தாலும் தயங்காமல் ஓடி வந்து கட்டிபிடித்து வாழ்த்துவார். ஹீ ஸ் அ பெர்ஃபெக்ட் ஜெண்டில் மேன். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..." என முடித்தார்.

பின்பு மூவரும் கோரசாக எங்களுக்கு ரெய்னா திருமணம் சோகம் தான். என்ன பண்ண? ஹூம்....பிரியங்கா குடுத்து வெச்ச்வங்க. எனிவே திருமண வாழ்த்துக்கள் ரெய்னா என பெரு மூச்சு விட்டு, நமக்கு விடை கொடுத்தனர்.

இந்த சின்ன இதயத்துகுள்ள இவ்ளோ சோகமா...?

-மு.கோதாஸ்ரீ
(மாணவர் பத்திரிகையாளர்)

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close