Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே...........

'என்னிடம் 100 இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்' என்றவர் தேசபக்தி மகான் சுவாமி விவேகானந்தர். 1863 ஜனவரி 12 ல் கொல்காத்தாவில் பிறந்தார் விவேகானந்தர். சிறுவயதிலேயே இரக்க குணம் உடையவரான அவர் தியானத்தில் அதிகமாக ஈடுபடுவார்.

கல்வியில் சிறந்து விளங்கினார். விளையாட்டு மற்றும் இசையில் பெரும் வல்லவராக திகழ்ந்தார்.

சிறுவயதில் ஒருமுறை தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கிழவர், மரத்தில் பூதம் இருப்பதாக கூறினர். அதற்கு, “பூதம் இருந்தால் அது எங்களை அப்பொழுதே விரட்டியிருக்கும்” என சட்டென சமயோஜிதமாக பதிலளித்தார்.

இளம்வயதிலேயே வாழ்க்கையின் அர்த்தத்தை அறிய விரும்பிய அவர், அப்பொழுது மக்கள் மத்தியில் எவரேனும் கடவுளை கண்டதுண்டா என கேள்வி எழுப்பினார். அதைநோக்கி தனது தேடலை விரிவுபடுத்தினார்.

அப்போது தட்ஷணேசுவரத்தில் வாழ்ந்து வந்த ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், “ யார் கடவுளை காண ஏங்கு கிறார்களோ அவர்களே அவரை காண இயலும்”என்றார். இதுபோல் சுவாமி கன்னியாகுமரியில் கடலில் அமைந்திருந்த பாறையின் மீது அமர்ந்து ஆழ்ந்த தியானம் செய்தார்.

இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் வேண்டுதலின் பெயரில் 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடந்த சா்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டார்.

விவேகானந்தரின் சாதனை வாழ்வில் இந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரை பெரும் பங்குவகிக்கிறது. அந்த மாநாட்டில் அவர் முதலில் கூறிய  “அமெரிக்க சகோதர சகோதரிகளே” என்ற வார்த்தை அரங்கத்தையே அதிர வைத்தது. அதுவரை கூட்டங்களில் பார்வையாளர்களை சம்பிரதாயமாக குறிப்பிட்டு பேசியவர்கள் மத்தியில் முதன்முறையாக 'சகோதர... சகோதரிகளே!' என அவர் அழைத்ததுதான் அந்த கைதட்டலுக்கு காரணம்.

அவர் சர்வசமய சபையில் உச்சியில் இருந்தபோதிலும், தமது தாய் நாட்டின் ஏழைகளை நினைத்து வருந்தி னார். மேலை நாட்டு பயணம் முடித்த பிறகு இலங்கை கொழும்பு நகரிலிருந்து ஜரோப்பிய சீடர்களுடன் புறப்பட்டு,  1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை பாம்பன் துறைமுகத்துக்கு வந்தபோது இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, அவரை வரவேற்றார்.

”கோயிலில் ஒரே ஒரு ஏழையாயினும், அவனை ஜாதி மதம், இனம் போன்ற எதையும் பாராமல் அவனிடம் சிவபெருமானைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் அதிகமாக ஆனந்தம் அடைகிறார்" என்று அப்போது அவர் கூறினார். பின்பு 2009 ல் அவருக்கு  இதே இடத்தில்  மணி மண்டபம் கட்டப்பட்டது

- ர.அரவிந்த் (மாணவப் பத்திரிக்கையாளர்)
படங்கள்: பாண்டி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ