Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூப்பர் ஹீரோக்கள் மீட் பண்ணும் இடம் காமிக் கான்!

ங்களுக்கெல்லாம் சூப்பர் மேன், பேட் மேன், அயன் மேன் எல்லாம் தெரியும். இவுங்க எல்லாம் ஒரு நாள் ஒண்ணா சேர்ந்து மீட் பண்ணினா எப்படி இருக்கும், அதுவும் இந்தியாவில், பெங்களூருவில் மீட் பண்ணா எப்படி இருக்கும்? இதெல்லாம் நடக்கற காரியமானு நீங்க கேட்கலாம். ஆனால், அதுதான் உண்மை.

1970வது வருஷம் அமெரிக்காவில் சான் டிகோ காமிக் கான் மிகப்பெரிய அளவில் துவங்கப்பட்டது. இது இந்தியாவுக்கு வர 40 வருஷம் ஆச்சு, 2011-ம் ஆண்டுதான் முதன் முதலாக இந்தியாவில் இந்த காமிக் கான் நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்தது.

காமிக் கான் அப்படினா என்னன்னா, பிரபல சூப்பர் ஹீரோக்கள் மாதிரியும், பிரபல காமிக் கேரக்டர்கள் மாதிரியும் மேக்கப் போட்டு வந்து, போட்டியில கலந்துகிட்டு ஜெயிக்கறதுதான். அமெரிக்காவில் ஆரம்பித்த போது 3 லட்சம் பேர் கலந்துகிட்டாங்க. இத பார்த்த ஹாலிவுட் ஆட்கள் தங்களோட புது படங்களின் விளம்பரத்தை இங்கு ஓட்ட ஆரம்பிச்சாங்க. அதே ட்ரெண்ட ஃபாலோ பண்ணி இப்ப நடந்த பெங்களூரு காமிக் கான்ல தமன்னா நடிச்சு வெளிவர இருக்குற பாகுபலி படத்தோட ப்ரோமோஷனும் இடம் பெற்றிருந்தது.

இது மட்டுமில்லாமல், இங்கு ப்ரோக்ராம பார்க்க பல விதமான காமிக் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தாங்க. காமிக் ரசிகர்கள்னா குழந்தைகள்னு நினச்சீங்கன்னா அதுதான் தப்பு. வயது வித்தியாசம் இல்லாம பல விதமான வயதுல உள்ள நிறைய பேர் கலந்துகிட்ட இந்த நிகழ்ச்சியில், பல புதிய முயற்சிகள் செய்து, பல காமிக் கேரக்டர்கள் மாதிரி தங்களை தயார் செய்து போட்டிகளில் கலந்துக்கிட்டாங்க. இது மட்டுமில்லாமல் காமிக் புத்தங்கள், காமிக் வீடியோக்களோட வெளியீடும் இங்கு நடந்தது. பெங்களூருவில் ஏப்ரல் 3, 4, 5 நடந்த இந்த ப்ரோக்ராம்ல பல பிரபலங்கள் கலந்துகிட்டாங்க.

இதுல கலந்துகிட்ட காமிக் ரசிகர்கள் சிலர், இந்தியாவில் இது எங்கு நடந்தாலும் போய் பார்த்திடுவேன். புதுசு புதுசா இதுவரைக்கும் பார்க்காத காமிக் கதைகளை இங்கு பாக்கலாம் என்றனர். அதே சமயம் இந்த நிகழ்ச்சி குறித்து தெரியாத சிலர், 'இது என்ன பெரிய அளவுல நடக்குற ஃபேன்சி ட்ரெஸ் காம்படீஸன்தானே..?' என்று கூறிவிட்டு சென்றனர்.

என்ன பண்ணுறது... அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். இந்த நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு விஷயம், ஒரு குரூப் மக்கள் செல்ஃபி வித் ஸ்பைடர் மேன் அப்படிங்கிற அளவுக்கு சூப்பர் காமிக் ஹீரோக்களோட செல்ஃபிக்களை சுட்டு தள்ளிட்டாங்க!

பெங்களூரு காமிக் கான், காமிக் ஹீரோக்களின் சங்கமம்.

-ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ