Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிரளவைக்கும் கண்ணாடி மியூசியம்!

நீங்கள், பச்சைப் பசேல்னு மரங்கள், செடி, கொடிகள் நிறைந்த காட்டைத்தான் இதுவரை பார்த்திருப்பீர்கள். கண்ணாடி மரக் காட்டைப் பார்த்தது உண்டா? இந்த விந்தையான காடு எங்கு உள்ளது தெரியுமா? ஜப்பானில் உள்ள ஹகோன் (Hakone) நகரத்தில்தான்.

அங்குள்ள 'வெனேட்டியன் கிளாஸ் மியூசியத்தில், (Venetian Glass Museum) கண்ணாடித் துண்டுகள் சரங்களாகத் தொடுத்துத் தொங்கவிடப்பட்டுள்ளன. தூரத்தில் இருந்து பார்த்தால், நிஜமாகத் தண்ணீர் கொட்டுவதுபோலவே காட்சியளிக்கும்.

இந்தக் கண்ணாடி நீர்வீழ்ச்சியின் உயரம் 40 அடி. இங்குள்ள கட்டடத்தில் உள்ள விதவிதமான கண்ணாடிக் கலைப் பொருட்கள் பிரமிக்க வைக்கின்றன. வெளியே உள்ள ஒரு தோட்டத்தில்,  நூற்றுக்கணக்கான கண்ணாடிச் செடிகளும், உயரமான கிறிஸ்துமஸ் மரம், மரங்களில் கண்ணாடிக் கொடிகள், பூச்செடிகள், கண்ணாடித் துண்டுகளால் ஆன வண்ணப் பூக்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது போன்ற ஃபௌன்டெய்ன் ஆகியன உற்சாகம் தருகின்றன.

பகலில் வெயிலினால் மின்னும் இந்த கிளாஸ் மியூசியம், இரவில் வண்ண வண்ண விளக்குகளாகப் பிரகாசிக்கின்றன. இந்தக் கண்ணாடி மியூசியம், 1996-ல் தொடங்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதோடு, செல்ஃபி-யும் எடுத்துக்கொள்கிறார்கள்.

- என். மல்லிகார்ஜுனா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close