Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வந்துவிட்டது டூ-வீலர் ஆம்புலன்ஸ்!

ம்புலன்ஸ் சைரன் கேட்டதும் பதற்றத்தோடு வழிவிட நினைத்தாலும், பைக் ஒதுங்கக்கூட இடம் இருக்காதபடி டிராஃபிக் இந்தியாவாக மாறிவிட்டன இந்திய நகரங்கள். அதுவும் பீக் அவர்ஸில் சொல்லவே வேண்டாம்! டிராஃபிக் நெருக்கடிகளையும் தாண்டி நினைத்த நேரத்தில் ஓர் உயிரைக் காப்பதற்கு என்னதான் வழி?

வந்து விட்டது - பைக் ஆம்புலன்ஸ்! இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூருவில் டூ-வீலர் ஆம்புலன்ஸ் சர்வீஸை நேற்று கொடியசைத்துத் துவக்கியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா. இன்று முதல் கர்நாடகாவில் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள், சைரனுடன் ‘வ்வ்ர்ர்ரூம்’ என்று நகரங்களில் சுற்றி வருகின்றன.

30 டூ-வீலர் ஆம்புலன்ஸ்களில், முதலுதவி செய்வதற்கு முறையாகப் பயிற்சியளிக்கப்பட்ட, வாகன ஓட்டுதலில் தேர்ச்சி பெற்ற புண்ணியவான்கள் தயாராய் இருக்கின்றனர். வழக்கம்போல் 108-க்கு நீங்கள் போன் செய்தால் போதும்; அடுத்த ஐந்து முதல் பத்தாவது நிமிடத்தில் ‘தட் தட்’ என பைக் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு ஆஜராகிவிடும். விபத்து ஏற்பட்டவருக்கு முதலில் தேவைப்படுவது முதலுதவிதான் என்பதால், பைக் டிரைவர்கள் சரசரவென ஃபர்ஸ்ட் எய்ட்-ஐ ஃபாஸ்ட் எய்ட்-ஆக கொடுத்து முடிப்பதற்குள், ஃபோர்வீலர் ஆம்புலன்ஸும் ஸ்பாட்டுக்கு என்ட்ரி ஆகிவிடும்.

‘‘டிராஃபிக் நெருக்கடிகளைச் சமாளிக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி எடுத்து வருகிறோம். பெங்களூருவில் டிராஃபிக் நெருக்கடி அதிகம் என்பதால், ஆம்புலன்ஸ்களால் குறித்த நேரத்துக்குச் சென்று விபத்து அடைந்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. எனவேதான் இந்த பைக் ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது சோதனை முயற்சிதான். இப்போதைக்கு 30 பைக்குகளைக் களம் இறக்கியிருக்கிறோம். இதற்கு எப்படி வரவேற்பு என்பதைப் பொறுத்து, மேலும் இதைத் தொடரலாமா என்பது பற்றி முடிவெடுப்போம்!’’ என்று சொன்னார் கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காதர்.

பெரும்பான்மையாக அவென்ஜர் பைக்குகள்தான் ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றம் கண்டிருக்கின்றன. க்ரூஸர் பைக் என்பதாலும், அதிக இடவசதி கொண்டிருப்பதாலும் அவென்ஜரை இதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஸ்டெத்தஸ்கோப், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், பேண்ட்-எய்டுகள், சலைன் பாட்டில்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு அவென்ஜர் ஆம்புலன்ஸ் பைக்கின் விலை 2 லட்சமாம்.

விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது கர்நாடக சுகாதாரத் துறை!

- தமிழ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ